10 அடி நீள தோசையைச் சாப்பிடுபவருக்கு 71 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்ற சுவாரசியமான போட்டியை அறிவித்துள்ளது ஒரு உணவகம்.பொதுவாக உணவுப் பிரியர்கள், வித்தியாசமான உணவுகளை சுவைப்பதற்கே ஆர்வமாக இருப்பார்கள். விதவிதமான உணவு என்றால் செலவும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.
அதேவேளையில் சாப்பிடுவதற்கு உங்களுக்கு ரொக்கம் பரிசாகக் கிடைக்கும் என்றால் சும்மாவா? இருக்க முடியும். இந்தியாவில் உணவுப் பொருட்களை வைத்து போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அவை பெரும்பாலும் பரோட்டோ, பிரியாணி போன்றதாகவே இருக்கும்.இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள உணவகம் ஒன்று தோசையை வைத்து சுவாரசியமான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
10 அடி தோசை
டெல்லி டம்மி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக வெளியான பதிவு இணையத்தில் வைரலாகியது.கொடுப்பது 10 அடி தோசை. அதனை 40 நிமிடத்திற்குள் நீங்கள் முழுமையாகச் சாப்பிட்டு முடித்தால் உங்களுக்கு 71,000 ரூபாய் பரிசு. இதுதாங்க போட்டி.
இந்தப் போட்டியில் வெல்வது அவ்வளவு எளிதல்ல. இதில் பலர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் ஒரு கண்டிஷன், போட்டியில் பங்கேற்று முழு தோசையையும் சாப்பிடவில்லை என்றால் தோசையின் விலையான 1500 ரூபாயை கொடுத்துவிட வேண்டும். என உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
என்ன தோசைப் ப்ரியர்களே 10 அடி தோசையைச் சாப்பிட டெல்லிக்கு பறக்க ரெடியா?
மேலும் படிக்க...