இயற்கை சீற்றங்கள் மனிதர்களை மட்டுமல்ல, சில வேளைகளில் விலங்குகளின் உயிர்களையும் பலிகொண்டு விடுகின்றன. அந்த வகையில் அசாமில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மின்னல் தாக்கி பலி (Lightning strikes and kills)
அங்கு ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் 18 யானைகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் விலங்குகள் ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பலத்த மழை (Heavy rain)
அசாமின் நகோன் வனப்பகுதி பெரும்பாலும் உயர்ந்த மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். இங்குள்ள கதியதோலி வனச்சரகத்தில் 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது.
யானைகள் உயிரிழந்தன (The elephants died)
இந்த மழை காரணமாக, அங்குள்ள மலைப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாகத் தஞ்சம் அடைந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்தன.
பிரேதப் பரிசோதனை (Autopsy)
இது குறித்து தகவல் அறிந்த, வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் கிராம மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த யானைகளைக் கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணை (First phase investigation)
முதல் கட்ட விசாரணையில் மின்னல் தாக்கியதில் தான் யானைகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. யானைகள் உயிரிழந்த இடம் வெகு தொலைவில், மலைப்பாங்கான இடத்தில் உள்ளதால், அதிகாரிகள் செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலமைச்சர் உத்தரவு (Order of the Chief Minister)
மேலும் யானைகள் உயிரிழந்தனவா என அந்த வனப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். யானைகள் உயிரிழப்புக்கு , வனத்துறை அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளனர். அமைச்சரே நேரில் சென்று ஆய்வு செய்ய முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
முந்தைகய் சம்பவங்கள் (Previous events)
இதற்கு முன் மின்னல் தாக்கி யானைகள் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. சில ஆண்டுகள் முன் மேற்குவங்கத்தில் மின்னல் தாக்கியதில் 5 யானைகள் உயிரிழந்தன.
ஆய்வுக்குப் பிறகே (After the study)
கண்டாலி வனப்பகுதியில் வேட்டைக்காரர்கள் நடமாட்டமும் உள்ளதால் யானைகளின் உடல்களை நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே 18 யானைகளும் இறந்ததற்கான காரணம் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
8 ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா- தனி கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டன!
கொரோனா நோயாளிக்கு திருமணம் - கவச உடையில் தாலிக் கட்டிக்கொண்ட மணப்பெண்!