நம்மில் தற்போது பலர் வட மாநில உணவு பழக்கத்தை விரும்ப தொடங்கியுள்ளோம். இதற்கான ஆதாரம், வட மாநில கடைகளும் அதில் குவியும் கூட்டமும் தான். அந்த வட மாநிலங்களில் அதிகம் விற்கப்படும் மற்றும் விரும்பப்படும் உணவு வகையில் பராத்தா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இதற்கான GST வரி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது, வாருங்கள் பார்க்கலாம்.
இனி, நீங்கள் பராத்தா சாப்பிட விரும்பினால, மகாபாரத கிருஷ்ணர் பானியில் கூறினால் சிந்தித்து செயலாற்ற வேண்டியிருக்கும், ஏனேன்றால் இதற்காக நீங்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். குஜராத்தின் மேல்முறையீட்டு ஆணையம் (AAAR) ரொட்டிக்கும் பராத்தாவுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறுகிறது. ரொட்டிக்கு 5 சதவீத GST-யும், பராத்தாவிற்கு 18 சதவீத GST-யையும் ஈர்க்கும். அகமதாபாத்தைச் சேர்ந்த வாடிலால் இண்டஸ்ட்ரீஸ் (Vadilal Industries) நிறுவனத்தின் மேல்முறையீட்டின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் (ready to cook) சமைப்பதற்கு எளிதாக, அதே நேரம் இன்ஸ்டன்டான பல வகைகளை தயார் செய்கிறது, அதாவது (Fronzen Paratha) விற்பனைக்காக உறையவைக்கும் பராத்தாக்கள் ஆகும். ரொட்டிக்கும் பராத்தாவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பது நிறுவனத்தின் வாதமாக இருந்தது. இரண்டும் மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, எனவே பராட்டாக்களுக்கு கூட 5% GST விதிக்கப்பட வேண்டும். அவற்றை உருவாக்கும் செயல்முறை ஒரே மாதிரியாக இருப்பது மட்டுமல்லாமல், அவை பயன்படுத்தப்படும் மற்றும் உட்கொள்ளும் முறையும் ஒரே மாதிரியாக தான் உள்ளது என குறிப்பிட்டனர். ஆனால் AAAR நிறுவனத்தின் இவ்வாதத்தை நிராகரித்தது மற்றும் பராத்தா மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது குறித்து தெளிவுபடுத்தியது.
முந்தைய அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையத்தின் (AAR) அகமதாபாத் பெஞ்ச், ரெடி-டு-குக் அதாவது உறைந்த பராத்தாக்கள் மீது 18 சதவீத ஜிஎஸ்டியை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நிறுவனம் AAAR-ல் மேல்முறையீடு செய்தது. ஆனால் மேல்முறையீட்டு ஆணையம் AAR இன் முடிவை உறுதி செய்தது. வடிலால் இண்டஸ்ட்ரீஸ் தயாரிக்கும் பராத்தாக்களில் 36 முதல் 62 சதவீதம் மாவு உள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இதனுடன், உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் வெங்காயம் தவிர, இதில் தண்ணீர், வெஜிடேபல் ஆயில் மற்றும் உப்பு உள்ளது. சாதாரண ரொட்டி அல்லது சப்பாத்தியில் மாவு மற்றும் தண்ணீர் மட்டுமே உள்ளது மற்றும் நேரடியாக உண்ணப்படுகிறது, அதே சமயம் பராத்தா சாப்பிடுவதற்கு முன் சமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டன.
முரண்பட்ட தீர்ப்பு
முன்னதாக, மகாராஷ்டிரா AAR, பராத்தாக்கள் 5% ஜிஎஸ்டியை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் கேரளா மற்றும் குஜராத் AAR ரொட்டிக்கும் பராத்தாவுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறியது. பல்வேறு வகையான தீர்ப்புகள் விஷயத்தை மேலும் சிக்கலாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில அடுக்குகளை கலப்பது விஷயங்களை எளிதாக்கும். சொல்லப்போனால், நீங்கள் ஒரு தனி உணவகத்தில் சாப்பிடச் சென்றால், உங்கள் பில்லுக்கு ஐந்து சதவீதம் வரி விதிக்கப்படும். பின் அது, ரொட்டியோ அல்லது பராட்டாவோ எதுவாக இருந்தாலும் ஒன்றுதான்.
ட்விட்டரில் கோபமடைந்த பயனர்கள:
பராத்தா மீது 18 சதவீத வரி விதிக்கும் முடிவு குறித்து, பயனர்கள் ட்விட்டரில் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தீபக் குமார் என்ற பயனர் எழுதினார், 'மனித வரலாற்றில் சிறந்த பொருளாதார நிபுணர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லியின் புகழ்பெற்ற பராத்தா தெருக்களுக்கு சென்றுள்ளார் போலும். இந்நிலையில், மத்திய அமைச்சர்களும் காய்கறிகளை வாங்குகிறார்களா, காய்கறிகளுக்கு எப்போது ஜிஎஸ்டி விதிக்கப்படும் என வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். விண்ட் ப்ளோவர் என்ற பயனர் 18% ஜிஎஸ்டி காரணமாக, நீங்கள் குறைவான பராத்தா சாப்பிடுவீர்கள் மற்றும் உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவீர்கள் என்று பதிவிட்டுள்ளார். அடுத்ததாக, ஆஷிஷ் மிஸ்ரா என்ற பயனர், 'நேரடியாக சுவாசிப்பதற்கு ஜிஎஸ்டி விதியுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க:
திண்டுக்கல்: அஸ்வகந்தா சாகுபடியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
E-nam: வேளாண் வணிகத் திட்டங்கள் குறித்து வேளாண் அமைச்சர் ஆய்வு