Paytm செயலி மூலமாக 2 நிமிடத்தில் 2 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற முடியும். இதற்கு நீங்கள் Paytm இன் வாடிக்கையாளராக இருந்தால் மட்டும் போதும். உங்களுக்கு ரூ .2 லட்சம் வரை தனிப்பட்ட கடன் பெறலாம்.
முன்பெல்லாம் கடன் வாங்க வேண்டுமென்றால், வங்கி வாசலைக் குறைந்தது 15 முறையாவது ஏறிஇறங்க வேண்டும்.
கையெழுத்து (Signature)
கடன் பத்திரத்தில் பல இடங்களில் கையெழுத்துப் போட வேண்டும். வாங்கும் கடன்தொகைக்காக நம்மையே அடமானம் வைப்பதைப் போல உணரத் தோன்றும்.
அதுமட்டுமல்ல, நாம் வாங்கும் கடனுக்கு அரசு ஊழியர் ஒருவர் ஜாமீனும் போட வேண்டும்.
ஆவணங்கள் சரிபார்ப்பு, அலைச்சல் என பல சிரமங்கள் உள்ளன. இவை அனைத்தும் சரியாக இருந்தால்தான், நமக்கு வங்கிக்கடன் கிடைக்கும். இத்தனையையும் ஒப்படைத்தப் பிறகும் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகேக் கடன் கிடைக்கும்.
2 நிமிடத்தில் (In 2 minutes)
இதைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக உடனடிக் கடன் வழங்கும் வசதியை Paytm தொடங்கிவிட்டது. இந்த Paytm ஆப் (Paytm App) மூலமாக ரூ.2 லட்சம் வரையில் கடன் வழங்கப்படுகிறது. இரண்டே நிமிடத்தில் Maggi செய்வதுபோல 2 நிமிடத்தில் இந்தக் கடனைப் பெற்றுவிடலாம்.
இதற்காக எந்தவொரு வங்கிக் கிளைக்கும் அலையத் தேவையில்லை. உடனடிக் கடன் வழங்கும் இந்த வசதியை Paytm நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி (Personal Loan) குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
எப்போது வேண்டுமானாலும் (Anytime)
வங்கி வேலை நாள், விடுமுறை நாள், அரசு விடுமுறை என எந்த நாளில் வேண்டுமானாலும் இதில் கடன் வாங்கலாம். கடன் வழங்கும் முறை முற்றிலும் ஆன்லைன் சார்ந்தது.
ஒப்புதல் கிடைத்தவுடன் இரண்டே நிமிடத்தில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் கடன் தொகை டெபாசிட் (Deposit)செய்யப்பட்டுவிடும்.
திருப்பிச் செலுத்தும் காலம் (Repayment period)
இவ்வாறு வாங்கும் கடனைத் திருப்பிச் செலுத்த 18 முதல் 36 மாதங்கள் வரை காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.
பெறுவது எப்படி? (How to get?)
நீங்கள் Paytm மூலம் கடன் வாங்க விரும்பினால், Paytm பயன்பாட்டின் நிதி சேவைகள் பிரிவுக்குச் சென்று பின்னர் personal loan என்ற பிரிவை கிளிக் செய்வதன் மூலம் மேலதிக செயல்முறையை முடிக்க வேண்டும்.
இதற்குப் பிறகு, நீங்கள் கோரியத் தகவலை வழங்க வேண்டும், நீங்கள் இதற்குத் தகுதியானவரா, இல்லையா என்று கண்டறியப்பட்டு, அதன் பிறகு பணம் உங்கள் கணக்கில் மாற்றப்படும்.
மேலும் படிக்க...
கேஸ் சிலிண்டர் சலுகை! ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்!
SBI வங்கியில் டெபிட் கார்டு இல்லாமல் ATM-ல் பணம் எடுக்கலாம்! எளிய வழிமுறை!
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!