Blogs

Tuesday, 28 September 2021 08:25 AM , by: Elavarse Sivakumar

Credit : Newstm

அக்டோபர் மாதம் வந்தாலே பண்டிகைகளும் வரிசைகட்டிக்கிட்டு வந்து நிற்கும். அந்த வகையில் அடுத்த வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

விடுமுறை விபரம் (Holiday Details)

நாடு முழுதும் வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக் கிழமைகளில் முழு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதன்படி இந்தாண்டு அக்., 9, 23 ஆகிய இரண்டு நாட்களும் முழு விடுமுறை. அக்., 2 சனிக்கிழமையன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை.

விழாக்கால விடுமுறைகள் (Festive holidays)

அக்., 3, 10, 17, 24, 31 ஆகிய ஐந்து நாட்களும் ஞாயிற்றுக் கிழமை. இது தவிர அக்., 14, 15ல் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை.

மேலும் அக்., 19ல் மிலாடி நபி விடுமுறை. மேற்கண்ட 11 நாட்களும் நாடு முழுதும் வங்கிகளுக்கு முழு விடுமுறை. கூடுதலாக 10 நாட்கள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  • அக். 1அரையாண்டு கணக்கு முடிவு சிக்கிம்

  • அக். 6 மஹாளய அமாவாசை திரிபுரா, கர்நாடகா, மேற்கு வங்கம்

  • அக். 7 மேரா சவுரென் ஹவுபா லெய்னினங்தோ சனமஹி மணிப்பூர்

  • அக். 12 மஹா சப்தமி திரிபுரா, கர்நாடகா

  • அக். 13 மஹா அஷ்டமி திரிபுரா, ஒடிசா, சிக்கிம், அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட்.

  • அக். 16 துர்கா பூஜா சிக்கிம்

  • அக். 18 கதி பிஹு அசாம்

  • அக். 20 மகரிஷி வால்மிகி ஜெயந்தி திரிபுரா, கர்நாடகா, சண்டிகர், மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம்

  • அக். 22 மிலாடிநபியை தொடர்ந்து வரும் வெள்ளி ஜம்மு - காஷ்மீர்

  • அக். 26 அக்செஷன் டே ஜம்மு - காஷ்மீர்

இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு (For public attention)

எனவே பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் வங்கி ஊழியர்கள் தாங்கள் பார்க்காத இடங்களுக்குச் சென்றுவரத் திட்டமிடலாம்.

மேலும் படிக்க...

பெண்களின் சேலைகளைத் துவைக்க வேண்டும் - 6 மாத நூதன தண்டனை!

காவலர்களுக்கு வார ஓய்வு - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)