ஏதாவது சொந்தத்தொழில் தொடங்கி சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்களா நீங்கள்? உங்களுக்காக 3 ஐடியாக்களை நாங்கள் கொடுக்கிறோம்.
சொந்தக்காலில் நிற்பது என்பது எப்போதுமேத் தனி கவுரவத்தைத் தேடித் தருவது. அதனால்தான் சூழ்நிலை காரணமாக, அடிமைத்தொழில் செய்யும் அனைவரின் கனவும் சொந்தத் தொழிலாக இருக்கும். ஆனால் அது குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது.
அப்படி சொந்தத் தொழில் அதுவும் குறைந்த முதலீட்டில் சுயத் தொழில் செய்ய விரும்புபவராக இருந்தால், இநத் 3 தொழில்கள் Best Choiceசாக இருக்கும்.
உணவு தயாரிப்பு
கொரோனா நேரத்தில் தூய்மையான சுகாதார உணவுக்காக பலர் காத்திருக்கின்றனர். அதிலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் வெளியூரில் இருந்து வேலைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகம். அவர்களுக்கு வீட்டு சாப்பாடு கிடைத்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். எனவே நீங்கள் தரமான வீட்டு சாப்பாடு தயாரிக்கும் பணியில் இறங்கினீர்கள் என்றால் வெற்றி நிச்சயம்
இதற்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படாது. சமைக்கத் தேவையான உணவுப் பொருட்கள், பாத்திரங்கள் இவை மட்டுமே வாங்க வேண்டியதாக இருக்கும்.
மறுசுழற்சி ஸ்பூன்கள்
அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் அதைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத விஷயங்களை மக்கள் கவனத்தில் கொண்டுள்ளனர். மரக் கரண்டிகள் பயன்படுத்துவதை பெரும்பாலான உணவகங்கள் விரும்புகின்றன.
குறிப்பாக வீட்டுக்கு பார்சல் தரும்போது ஒரு முறை பயன்படுத்தும் இவ்வகை கரண்டிகளை அளிக்கின்றனர். உங்கள் ஊரில் இருக்கும் உணவகங்களில் இதுபோன்ற செய்து கொடுத்து நீங்கள் வருவாய் ஈட்டலாம்.
மேலும் அதற்கு அதிக மூலதனமும் தேவையில்லை.
இயற்கை விவசாயம்
கொரோனா காலத்தில் இயற்கை சார்ந்த விஷயங்களில் இன்னும் நமக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இயற்கை விவசாயத்தில் நாம் தொழிலை தொடங்கலாம்.
காய்கறிகள், பழங்களை இயற்கை முறையில் விளைவித்து அவற்றை சந்தைப் படுத்தலாம். ஆன்லைனிலும் நீங்கள் இதை விற்கலாம். நகரங்களில் வசித்து வந்தீர்கள் என்றால் மாடித் தோட்டம் அமைக்கலாம். இது குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தை அளிக்கக் கூடிய ஒரு தொழில் ஆகும்.
மேலும் படிக்க...
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!