நிலையான வைப்புத்தொகை (Fixed deposit rates) அதுவும் 3 வருடத்திற்கு வங்கியில் டெபாசிட் செய்யணும்னு நினைக்கிறீங்களா. உங்களுக்கு தான் இந்த பதிவு. 3 வருட FD-க்கு 8.6% வரை வட்டி வழங்கும் வங்கிகள் எது என்கிற பட்டியலை இப்பகுதியில் காண்போம்.
முன்னணி பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்றவற்றால் வழங்கப்படும் FD-வட்டி விகிதங்கள், சிறிய நிதி வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் விகிதங்களைப் போல இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
சிறு நிதி மற்றும் சில தனியார் வங்கிகள் மூன்று வருட FD-களுக்கு 8.6 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. BankBazaar தொகுத்த தரவுகளின்படி, 3 வருட காலவரையறை கொண்ட FD-களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கும் முதல் 10 வங்கிகள் குறித்த தகவல் பின்வருமாறு-
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank ) மூன்று வருட FD-களுக்கு 8.6 சதவீத வட்டியை வழங்குகிறது. சிறிய நிதி வங்கிகளில், இது சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.29 லட்சமாக நமக்கு கிடைக்கும்.
AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (AU Small Finance Bank and Equitas Small Finance Bank ) மூன்று வருட FD-களுக்கு 8 சதவீத வட்டியை வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.27 லட்சமாக கிடைக்கும்.
வெளிநாட்டு வங்கிகளில், Deutsche Bank சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. Deutsche Bank மூன்று வருட கால FD களுக்கு 7.75 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வங்கிகளின் எஃப்டிகளில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.26 லட்சமாக கிடைக்கும்.
டிசிபி வங்கி (DCB Bank) மூன்று வருட கால அவகாசத்துடன் கூடிய எஃப்டிகளுக்கு 7.60 சதவீத வட்டியை வழங்குகிறது. தனியார் வங்கிகளில், இது அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ.1 லட்சம் முதலீடு என்பது மூன்று ஆண்டுகளில் ரூ.1.25 லட்சமாக கிடைக்கும்.
பந்தன் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை மூன்று வருட கால அவகாசத்துடன் கூடிய எஃப்டிகளுக்கு 7.25 சதவீத வட்டியை வழங்குகின்றன. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக கிடைக்கும்.
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூன்று வருட FD-களுக்கு 7.20 சதவீத வட்டியை வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக கிடைக்கும்.
சிறிய தனியார் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் புதிய வைப்புகளைப் பெற அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. மத்திய வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன், ரூ.5 லட்சம் வரையிலான நிலையான வைப்புகளில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
தங்கத்தின் விலை தொடர்ந்து 5 நாளாக உயர்வு- பொதுமக்கள் ஷாக்
NFC-யில் 206 அப்ரண்டிஸ் பணியிடங்கள்: ட்ரை பண்ணி பாருங்க பாஸ்