திருமணம் என்பது பூர்வ கால பந்தம், இறைவனின் இணைப்பு, என்றெல்லாம் பல வார்த்தைகளால் கவுரப்படுத்தப்பட்டாலும், குடும்பத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளைக் காட்டி கலாய்ப்பதே அதிகம் நடக்கும்.
வயது மிக முக்கியம் (Age is very important)
பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்து வைக்கட்டும் எனத் காத்திருப்பவர்களும் உண்டு. பெற்றோருக்கு அந்த சுமையைக் கொடுக்காமல், தனக்கு ஏற்றத் துணையை, தானேத் தேடிக்கொள்வோரும் உண்டு.
இருப்பினும், திருமணம் செய்து கொள்வதற்கு, வயது மிக முக்கியம்.
க்யூட் வீடியோ (Cute video)
ஆனால் இங்கு ஒரு சிறுவன், எனக்கு இப்போவேக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என அடம்பிடிக்கிறான். கேரளாவில் உள்ள 3 வயதே ஆன சிறுவன் தனக்கு இப்பவே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தனது தாயிடம் அழுதுபுரண்டு, அடம் பிடிக்கும் க்யூட் வீடியோ சமூக
வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் உள்ள சிறுவன் அம்மா கல்யாணம் கட்டணும் என்று கேட்கிறான். அதற்கு பதிலளித்த அந்த தாய் பொண்ணு எங்க கிடைக்கும்? என அப்பாவியாக விளக்கம் அளிக்கிறார்.
பதிலளிக்கும் சாதுர்யம் (Responsiveness)
அம்மாவின் கேள்விக்குச் சாதுர்யமாக சமாளிக்கும் அந்தச் சிறுவன்,
டிவியில் பொண்ணு கிடைக்கும். வெளியே போனால் பொண்ணு கிடைக்கும். இப்பவே கல்யாணம் பண்ணணும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோ தற்போது பலரது நெஞ்சையும் பதம் பார்த்திருக்கிறது. பொதுவாகக் குழந்தைகள் எதையாவது ஒன்றைக் கேட்டு அடம்பிடிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த சிறுவன் அடம் பிடித்தால், அவரது தாயார் என்ன செய்ய முடியும்.
கொரோனாவால் நலம் (Health by Corona)
பெற்றோர்கள் பலரும் தங்களுடைய குழந்தைகளை வளர்ப்பதற்கு இந்தக் கொரோனா பேருதவி செய்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தங்களுடைய குழந்தைகளின் கொஞ்சலையும் ஆர்ப்பாட்டங்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு பலருக்கும் வாய்த்திருக்கிறது. அதில் ஒன்றுதான் திருமணம் வேண்டும் என்ற 3 வயது சிறுவனின் க்யூட் வீடியோ.
மேலும் படிக்க...
ஏமாற்றும் கணவனை மனைவி கொலை செய்யலாம்! அதிரடி சட்டம்!
டிரெண்டிங் மோகம் - ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து கொண்ட நபர்!