ஓடி ஓடி உழைத்தாலும், 60 வயதிற்குப் பிறகு ஓய்வும் கட்டாயம். இந்த ஓய்வு காலத்தில், மாதம் குறிப்பிட்டத் தொகையை நம் மாதச் செலவுக்காக ஓய்வூதியமாகப் பெற வேண்டியதும் கட்டாயம். அப்படி ஓய்வு காலத்தைக் குறித்தத் திட்டமிடல் நம்மில் பலருக்கு இல்லை. ஆனால், சற்று விழிப்புடன் இருந்து, நம்முடைய இளம் காலத்திலேயேச் சேர்க்கத் தொடங்கினால் ஓய்வு காலத்தை ஓஹோவென வாழ முடியும்.
நம்முடைய இந்த முயற்சிக்கு மத்திய அரசும் கைகொடுக்கிறது. எப்படி என யோசிக்கிறீர்களா? உங்களுக்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தில் சேர்ந்தால் போதும். 60 வயதிற்கு பிறகு, உங்களுக்கு மாதம்தோறும் 3000 ரூபாய் ஓய்வுதியம் கிடைக்கும்.
ஜன் தன் யோஜனா
நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கும் வங்கிச் சேவைக்குள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய, மாநில அரசின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் இணைபவர்களுக்கு குறைந்தபட்சமாக 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்க உத்தரவாதம் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் 60 வயதைத் தாண்டிய பிறகு இந்த ஓய்வூதியம் வரத் தொடங்கும்.
பயனாளி ஒருவேளை இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு இந்த ஓய்வூதியத் தொகையில் 50%குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த ஓய்வூதியத் தொகையைப் பெறமுடியும்.
இணைவது எப்படி?
-
18 வயதில் இத்திட்டத்தில் இணைந்தால் மாதத்துக்கு 55 ரூபாய் செலுத்த வேண்டும்.
-
40 வயதில் இணைந்தால் மாதத்துக்கு 200 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
-
இணையும் வயதைப் பொறுத்து பங்களிப்பு தொகை மாறுபடும்.
-
ஜன் தன் திட்டத்தில் கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.
-
2018 ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குப் பிறகு ஜன் தன் கணக்கு தொடங்கியவர்களுக்கு இச்சலுகை கிடைக்கும்.
-
இதுமட்டுமல்லாமல் பொது காப்பீடாக ரூ.30,000 கிடைக்கிறது.
நிபந்தனை
இந்த ரூ.1.3 லட்சம் வரையிலான பலன்களைப் பெறுவதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. ஆதார் கார்டை ஜன் தன் வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.
ரூ.10,000
ஜன் தன் கணக்கின் மிக முக்கியமான வசதி என்னவென்றால், உங்களுடைய வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் கூட நீங்கள் ரூ.10,000 வரை ஓவர் டிராஃப்ட் முறையில் பணம் எடுக்க முடியும். அதற்கு உங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.
பொதுவாக ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் முதல் ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும். இந்த வங்கிக் கணக்குக்கு டெபிட் கார்டு வாங்கப்பட்டு, அடிக்கடி பணப் பரிவர்த்தனையும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் படிக்க...
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 - அமைச்சர் தகவல்
தேர்த்திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து - 11 பேர் உடல் கருகி பலி!