Blogs

Tuesday, 30 August 2022 08:41 PM , by: Elavarse Sivakumar

குடும்பத்தின் குதூகலத்திற்கு குழந்தைகளின் பங்கு இன்றியமையாதது என்பது நாம் அறிந்ததே. அதனால்தான் குழல் இனிது, யாழ் இனிது என்பர்,மழலைச் சோல் கேளாதோர் என்று கூறினர் நம் முன்னோர்.

ஆனால் மூத்தக் குடிமக்களை மக்களை மகிழ்விக்க இந்த நாட்டில் குழந்தைகளைப் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. இதனை வெளிப்படுத்துகிறது இந்த வித்தியாசமான விளம்பரம்.

அசத்தல் விளம்பரம்

ஜப்பானில் முதியோர்களை மகிழ்விக்க, 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலைக்கு தேவை என முதியோர் இல்லம் அளித்த விளம்பரம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பான்

உலகில் வயதானவர்கள் அதிகம் வாழும் நாடாக ஜப்பான் திகழ்கிறது. தெற்கு ஜப்பானில் உள்ள முதியோர் இல்லம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் 'ஆட்கள் தேவை. எங்களிடம் வேலைக்கு சேருவோருக்கு டயாப்பர்கள் மற்றும் பால் பவுடர் சம்பளமாக வழங்கப்படும்.  இந்த இல்லத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின் முக்கியமான ஒரே வேலை, காப்பாளர்களுடன் முதியோர் இல்லத்தை சுற்றி வலம் வருவது தான். அவர்கள் பசி, தூக்கம் அல்லது அவர்களின் மனநிலையை பொறுத்து இடைவெளி எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

80 வயதுடையவர்கள்

இதுகுறித்து, முதியோர் இல்லத்தின் தலைமை நிர்வாகி கிமி கோண்டோ கூறியதாவது:-
எங்களது இல்லத்தில் தங்கியுள்ள 100க்கும் மேற்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் உற்சாகத்தை அதிகரிக்க, இதுவரை 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளைப் பார்த்த மாத்திரத்தில், முதியோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

நல்ல வரவேற்பு

ஷிப்ட் முறை போன்ற எதுவும் இல்லை. குழந்தைகளுடன் அவர்களது தாய்மார்களும்.இல்லத்தில் அனைத்து நேரமும் வரலாம். இது அவர்களை ஒரு பூங்காவிற்கு அழைத்து செல்வது போன்றது தான். இந்த அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதியோர்கள், குழந்தைகளை காணும் போது மகிழ்ச்சியடைந்து வாழ்த்துகிறார்கள். கொஞ்சி பேசுவதுடன், அணைத்து கொள்கிறார்கள். சில குழந்தைகள், எங்கள் இல்லத்தில் உள்ள முதியோர்களுடன் உண்மையான பாட்டி, பேரன் போலவே மாறிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆறுதல்

குழந்தைகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். இது எனக்கு, இளம்வயதில் குழந்தை பெற்ற சமயத்தை நினைவூட்டுகிறது' என்று இங்கு தங்கியிருக்கும் முதியவர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.1,000 உயர்வு!

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் விதைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)