இறைவனின் விருப்பத்தின்பேரிலேயே தம்பதிகள் இணைகிறார்கள், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றெல்லாம் புனிதமானதாகக் கருதப்படும் திருமணம் கவுரப்படுத்தப்படுகிறது.
குறையும் மணமகள்கள் (Decreasing brides)
ஆனால் ஆண், பெண் விகிதாத்தரத்தில் பெண்களின் எண்ணிக்கை அண்மைகாலமாகக் குறைந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக, ஏராளமான ஆண்கள் திருமணம் செய்துகொள்ள பெண் கிடைக்காமல் உள்ளனர்.
அந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில் மணமகள் கிடைக்காமல் 40 ஆயிரம் பிராமண இளைஞர்கள் தவிக்கின்றனர். பிரச்னைக்குத்தீர் வு காண அவர்கள் செய்தது என்ன தெரியுமா?
பிராமணம் சங்கம் தகவல் (Brahmanical Society Information)
பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிராமணப் பெண்களைத் தேடுவதற்காக ஒரு அமைப்பைபே உருவாக்கி இருப்பதாகக் பிராமணர் சங்க தலைவர் நாராயணன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிராமண பெண்களை தேடுவதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி படிக்கவும், பேசவும் தெரிந்தவரை இதற்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட உள்ளார்.
40,000 பேர்
30 முதல் 40 வயதுக்குட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பிராமண இளைஞர்கள் மணப்பெண்களை கண்டுபிடிக்க முடியாததால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.
10: 6 விகிதாச்சாரம் (10: 6 ratio)
திருமண வயதில் 10 பிராமண ஆண் குழந்தைகள் இருந்தால், தமிழகத்தில் திருமண வயதில் ஆறு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். எனவே லக்னோ மற்றும் பாட்னாவில் உள்ள மக்களுடன் தான் தொடர்பு கொண்டு வருகிறார்கள். பிராமணர்கள் மத்தியில் இந்த நடவடிக்கையை வர வேற்றாலும், வேறு கருத்துக்களும் உள்ளன.
திருமண வயதில் தமிழ் பிராமணப் பெண்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்றாலும் ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்காததற்கு இது ஒன்றே காரணம் அல்ல.
ஆடம்பரமும் காரணம் (Luxury is the reason)
மணமகன்களின் பெற்றோர்கள் திருமணங்களில் ஆடம்பர நிகழ்ச்சியையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் திருமணத்தை எளிமையான முறையில் நடத்துவதற்கு எது தடையாக இருக்கிறது? ஏன் கோவிலோ அல்லது வீட்டிலோ செய்யக் கூடாது?.
இன்றைய காலத்திலும் கூட, தமிழ் பிராமண திருமணங்கள் இரண்டு முதல் 3 நாட்கள் வரை நீட்டிக்கப்படுகின்றன. இதில் வரவேற்பு மற்றும் பிற திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய சடங்குகள் அடங்கும்.
ரூ.15 லட்சம் வரை (Up to Rs 15 lakh)
நகைகள், திருமண மண்டபத்தின் வாடகை, உணவு மற்றும் பரிசுப் பொருட்களுக்கான செலவுகள் உள்பட மொத்தமாக இந்த நாட்களில் குறைந்த பட்சம் ரூ. 12 முதல் 15 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இதுவும் பெண் கிடைக்காததற்கு மற்றொரு காரணம் என நாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...