சிவகங்கை பகுதியில் விவசாய நிலத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மேற்கொள்வதற்காக 50 கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நன்னடத்தை அடிப்படையில் இக்கைதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
சிறை என்பதே குற்றவாளிகளை நல் வழிப்படுத்த தான். சிறைக்குற்றவாளிகள் தங்களது தண்டனை காலத்துக்குப் பின் சமூகத்தில் திறம்பட வாழும் வகையில் சிறையில் இருக்கும் போதே அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 50 கைதிகள் உரம் தயாரிப்பு, கால்நடை வளர்ப்பு, விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுக்குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி கூறுகையில், "சிறையில் உள்ள கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில், கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை விவசாய பணியில் ஈடுபடுத்தி வருகிறோம். இவர்கள் கரும்பு, தென்னை, கொய்யா, காய்கறிகளை போன்றவற்றை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் மாடு, ஆடு, கோழிகள் பராமரிப்பிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இயற்கை உரம் தயாரிக்கவும் செய்கிறார்கள்” என்றார்.
மேலும் கூறுகையில் ''இந்த விவசாய நடவடிக்கைகள் தண்டனை காலம் முடிந்தப்பின் கைதிகள், சமூகத்துடன் எளிதில் ஒன்றிணைய உதவும் என்கிற நம்பிக்கை உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் பொருட்கள் குறைந்த விலையில் சிறைக்கும், பொதுமக்கள் வாங்கும் நிலையிலும் சந்தைக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக அவர்களுக்கு உரிய சம்பளமும் வழங்கப்படுகிறது” என்றார்.
சிறை அங்காடி மூலம் விளைப்பொருள் விற்பனை:
சிறைக்கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள், உணவு வகைகள், சிறை அங்காடி மூலம் நேரடியாக பொதுமக்களுக்கு சந்தை விலையுடன் ஒப்பீடுகையில் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் கூட, மதுரை மத்திய சிறையில் சிறை கேண்டீன் எனப்படும் (PCP- prison cash properties) புதிய பயோமெட்ரிக் முறையை சிறைத்துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார்.
அதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், சிறைக் கைதிகள் தங்கள் பயோமெட்ரிக் மூலம் கேன்டீனில் பொருட்களை வாங்கலாம் என்றார். அனைத்து PCP-களிலும் உள்ள பொருட்களின் விலை ஒரே மாதிரியாக இருக்கும், மேலும் கைதிகள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான பில் தொகையை சேகரிக்கலாம், என்றார்.
PCP -யில்32 சமையலறை பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் கைதிகளால் தனித்தனியாக சமைக்க முடியாது. சிறைச்சாலையில் உள்ள பொதுவான சமையலறையில் மட்டுமே இந்த பொருட்களைப் பயன்படுத்தி உணவு தயாரிக்க முடியும். மத்திய சிறைகளில் உள்ள சிறை அங்காடிகளில் காட்சிப்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் கைதிகள் வாங்கலாம், என்றார்.
சிறை அங்காடியில் விற்கப்படும் பொருட்களை பொதுமக்களும் வாங்க முன்வர வேண்டும் என்றார். விற்கப்படும் அனைத்து பொருட்களையும் தயாரிக்க சிறைக் கைதிகள் பயிற்சியளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் விற்பனையிலிருந்து ஒரு சதவீதத்தைப் பெறுகிறார்கள் என்றும் டிஜஜி பழனி தெரிவித்தார்.
சிறைச்சாலை அங்காடியில் விரைவில் மரம் மற்றும் இரும்பு சாமான்களை அறிமுகப்படுத்த உள்ளோம். மேலும், மதுரை மத்திய சிறைச்சாலையில் 2 ஆயில் பிரஸ்கள் அனுமதிக்கப்பட்டு எண்ணெய் உற்பத்தி தொடங்கும். இந்த எண்ணெய் பஜாரில் பொது மக்களுக்காக விற்கப்படும்," என்றார்.
pic courtesy: ANI
மேலும் காண்க:
கருகும் குறுவை பயிர்- வீதியில் இறங்கப் போகும் தமிழ்நாடு விவசாயிகள்