Blogs

Saturday, 18 June 2022 09:10 AM , by: Elavarse Sivakumar

தவறான இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டதை போட்டோ எடுத்து அனுப்புவோருக்கு, 500 ரூபாய் சன்மானம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தால், விபத்துக்களைத் தவிர்க்கலாம். ஆனால், சாலைகளில் வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவோர், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதில் மெத்தனம் காட்டுகின்றன.

அதிகரிக்கும் விபத்து

இது மட்டுமல்ல, பார்க்கிங் இல்லாத இடங்களில்கூட வாகனங்களை நிறுத்திவிட்டு, விபத்துக்கு வழிவகுக்கின்றனர். இதனைப் போக்கும் வகையில், சாலைப் போக்குவரத்து அமைச்சகம் புதியத்திட்டத்தை வகுத்துள்ளது.

புதியத் திட்டம்

அதாவது சாலையோரங்களிலும் தெருக்களிலும் தேவையற்ற இடங்களில் அல்லது அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதையும், அதன் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்து போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

தவறான இடங்களில் நிறையப் பேர் வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டுச் செல்வதைத் தடுக்க, தவறான பார்க்கிங் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கும் சன்மானம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அதாவது, தவறான இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டதை பொதுமக்கள் யாராவது பார்த்தால் அதை போட்டோ எடுத்து அரசுக்கு அனுப்பினால் அவர்களுக்கு 500 ரூபாய் ரிவார்டு வழங்கப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் முறையற்ற பார்க்கிங் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

மனைவி பெயரில் வீடு கட்ட சலுகை-எஸ்பிஐ அறிவிப்பு!

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாடப் பழக்கங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)