Blogs

Wednesday, 06 October 2021 09:50 AM , by: Elavarse Sivakumar

Credit : Hindu Tamil

என்னதான் வேலைக்குச் சென்று மாதசம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சுயமாக சிறுத்தொழில் செய்ய வேண்டும் என விரும்புபவரா நீங்கள்? அதுவும் குறைந்த முதலீட்டில், அப்படியானால் இந்தத் தொழில் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

தேனீ வளர்ப்பு (Beekeeping)

ஏனெனில், இயற்கைக்கும் நலனை உருவாக்குவதுடன், மனிதர்களுக்கு நன்மை பயக்கும் தொழில் என்றே இதனைச் சொல்லாம். ஏனெனில், விவசாயிகளின் மகசூல் அதிரிப்புக்கு இந்தத் தொழில் மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்னுமாத் தெரியவில்லை. நான் சொல்லவருவது தேனீ வளர்ப்பு, அதாவது தேனீக்கள் ராஜாங்கம் நடத்துவது.

15%  முதலீடு (15% investment)

ராஜ பரிபாலனைக் கொண்ட தேனீக்கள் உலகத்தில் பிரவேசிக்க நீங்க தயாரா? நீங்கள் 15 சதவீதம் மட்டுமே முதலீடு செய்தால் போதும். ஏனெனில், தேனீ வளர்ப்புக்கு அரசு 80 முதல் 85 சதவீதம் வரை மானியம் அளிக்கிறது.
பலவகைத் தேனீக்கள்.

கொம்புத் தேனீ, மலைத் தேனீ, கொசுத் தேனீ, அடுக்குத் தேனீ, மேற்குலகத் தேனீக்கள், கிழக்குலகத் தேனீக்கள் என பல தேனீக்களின் வகைகள் உள்ளன.

லாபம் (Profit) 

 தேனீ வளர்ப்பில் இருந்து லட்ச கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். தேனீக்களைச் சேகரித்து, வளர்த்து அதிலிருந்து தயாரிக்கப்படும் தேன் மற்றும் மெழுகை விற்பனை செய்வதன் மூலம், பல லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும். இது முற்றிலும் இயற்கையைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.
தேனீ வளர்ப்பு என்பது விவசாயம் மற்றும் தோட்டக்கலை உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றலையும் கொண்டது. அத்துடன் மட்டும் இல்லாமல், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் உதவும்.

தொடங்குவது எப்படி? (How to get started?)

தேனீ வளர்ப்பு மற்றும் தேனி வளர்ப்புப் பெட்டிகளை எப்படி பராமரிப்பது என்பதுக் குறித்து தொழில்முறை சங்கங்களிலிருந்து தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தேனீக்களின் இருப்பிடம் மற்றும் உங்கள் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தேன் வகைகள் பற்றி விசாரிக்கவும்.
முதல் அறுவடைக்குப் பிறகு தேனீ வளர்ப்பு வேலையை மதிப்பீடு செய்யவும்.

உங்கள் தேனீக்கள் மற்றும் தேனீக்களின் ஆரோக்கியத்தையும் சரிபார்க்க வேண்டும். மேலும் தேனீ வளர்ப்பு தொழிலுக்கு ஆகும் செலவுகளை தேன் மற்றும் தேன் மெழுகு வருமானத்துடன் ஒப்பிடுங்கள். மேலும் தேனீ தொடர்பான பொருட்கள் விற்பனைக்கு மாநில வருவாய் துறையைத் தொடர்பு கொள்ளவும்.

சந்தை நிலவரம் (Market situation)

தேனைத் தவிர, நீங்கள் தேனீக்களிலிருந்து பல பொருட்கள் தயாரிக்கலாம். தேன் மெழுகு, ராயல் ஜெல்லி, புரோபோலிஸ் அல்லது பீ கம் (Bee Gum) மற்றும் தேனீ மகரந்தம் போன்ற பொருட்கள் தயாரிக்கலாம். இந்த பொருட்கள் அனைத்தும் மனிதர்களுக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதேநேரத்தில் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுபவை. எனவே அவற்றை விற்பதன் மூலம் நீங்கள் நல்ல வருமானம் ஈட்டலாம்.

சிறப்பு அம்சம் (Special feature)

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 'பயிர் உற்பத்தித்திறனை மேம்படுத்த தேனீ வளர்ப்பு மேம்பாடு' (Development of Beekeeping for Improving Crop Productivity) என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயத்துறை மேம்படுத்தப்பட வேண்டும், உற்பத்தித்திறன் அதிகரிக்க வேண்டும். மேலும் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஆகியவை ஏற்படுத்துவது நோக்கமாகும்.

மானியம் பெறுவது எப்படி? (How to get a grant?)

தேசிய தேனீ வாரியம் மற்றும் NABARD (National Bank for Agriculture and Rural Development) உடன் இணைந்து இந்தியாவில் தேனீ வளர்ப்பவர் வணிகத்திற்கு நிதியளிப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இந்தத் துறையில் பெண்களை ஈடுபடுத்தவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீங்கள் அருகிலுள்ள தேசிய தேனீ வாரியத்தைத் (Beekeeping Development Committee) தொடர்பு கொள்ளலாம் அல்லது இணையதளத்தைப் பார்வையிடலாம்.

மேலும் படிக்க...

வேலையற்ற இளைஞர்கள் பால் பண்ணைகள் திறக்க மானியம் வழங்கும் அரசு!

PM-Bojan அரசுப்பள்ளிகளில் பிஎம்-போஜன் பெயரில் மதிய உணவு!-

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)