Blogs

Monday, 01 August 2022 08:12 AM , by: Elavarse Sivakumar

இளையத் தலைமுறையினரிடையே யூ டியூப் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நன்மைகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், கேரளாவில், 12 வயது சிறுவன் யூ டியூப் பார்த்து, ஒயின் தயாரித்து, நண்பனை மயக்கமடையச் செய்திருக்கிறான்.

பெற்றோர் வாங்கிய திராட்சையை பயன்படுத்தி மது தயாரித்ததை சிறுவன் ஒப்புக்கொண்டான். ஸ்பிரிட் அல்லது வேறு எதையும் மூலப்பொருளாக பயன்படுத்தவில்லை என்று சிறுவன் கூறினான்.

ஒயின் தயாரிப்பு

சமூக வலைதளங்கள் பல்வேறு நல்ல தகவல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும், சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதில் யூ டியூப் பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்பவர்கள் மத்தியில் மதுபானம் தயாரித்து நண்பனை மயக்கமடையச் செய்துள்ளான் 12 வயது சிறுவன் ஒருவன்.

நண்பன் மயக்கம்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அந்த, அரசுப்பள்ளி மாணவன் தான் தயாரித்த மதுவை பள்ளிக்கு கொண்டு சென்று நண்பனுக்கு கொடுத்துள்ளான். அதனை பருகிய மாணவன் வாந்தி எடுத்து மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தாங்களாகவே வழக்குப்பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெற்றோர் வாங்கிய திராட்சையை பயன்படுத்தி மது தயாரித்ததை சிறுவன் ஒப்புக்கொண்டான்.

தயாரித்தது எப்படி?

யூ டியூப் வீடியோவில் காட்டியபடி திராட்சை பழ சாறை பாட்டிலில் ஊற்றி நிலத்தடியில் புதைத்திருக்கிறான். பின்னர், சில நாட்கள் கழித்து அதனை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று நண்பனுக்கு கொடுத்ததாகவும் அந்த சிறுவன் தெரிவித்தான். இருப்பினும் ஸ்பிரிட் அல்லது வேறு எதையும் மூலப்பொருளாக பயன்படுத்தவில்லை என்றும் அந்த சிறுவன் கூறினான்.

சட்டப்படி நடவடிக்கை

இதனை தொடர்ந்து பாட்டிலில் இருந்து மது மாதிரிகளை சேகரித்து, நீதிமன்ற அனுமதியுடன் அதனை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மதுவில் ஸ்பிரிட் அல்லது வேறு ஏதேனும் மதுபானம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அப்படி ஏதாவது இருப்பது கண்டறியப்பட்டால், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க...

ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!

கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)