Blogs

Friday, 05 March 2021 10:13 AM , by: Elavarse Sivakumar

Credit : Dinamalar

கொல்கத்தாவில் உள்ள ஒரு கடையில், ஒரு கப் தேநீர், 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை அருந்த பெரும்பணக்காரர்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர் என்றால் நம்ப முடிகியதா உங்களால்? ஆம் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அதுதான் உண்மை.

இந்தியாவில் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கை, தேநீர் குடிப்பதில் தான் துவங்குகிறது. சாதாரணமாக, ஒரு கப் தேநீர், 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கப் தேநீர் ரூ.1,000 (A cup of tea costs Rs.1,000)

ஆனால், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில், முகுந்த்புர் பகுதியில் உள்ள, நிர்ஜஷ் டீக்கடையில் 'போ லே' என்ற ஒரு தேநீர் ரகம், ஒரு கப், 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

100 வகைத் தேநீர் (100 types of tea)

இதுமட்டுமல்ல இந்தக் கடையில், 100 வகையான தேநீரும் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து, இந்த கடையின் உரிமையாளர் பார்த்தா பிரதிம்கங்குலி கூறியதாவது: ஏழு ஆண்டுகளுக்கு முன், இந்த தேநீர் கடையை துவக்கினேன்.

வாடிக்கையாளர்களை கவர, 'சில்வர் நீடில் ஒயிட் டீ, கிரீன் டீ, பிளாக் டீ, செம்பருத்தி டீ, லாவண்டர் டீ, ஒயின் டீ, துளசி இஞ்சி டீ, டீஸ்டா வேலி டீ, மகாய்பாரி டீ' என, பல தேநீர் வகைகளை தயாரித்தேன்.

தேயிலை இறக்குமதி (Import of tea)

டார்ஜிலிங் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் விளையும், விதவிதமான தேயிலைகளை இறக்குமதி செய்து, அவற்றை, சரியான தட்ப வெப்ப நிலையில் பாதுகாத்து, பதப்படுத்தி, சுவைமிக்க தேநீர் தயாரிக்கிறேன்.

அதனால், என் கடையில் விற்கப்படும் தேநீரின் மவுசு, உலகம் முழுதும் பரவியது. இதையடுத்து, 'சில்வர் நீடில் ஒயிட் டீ' என்ற, ஒரு வகை தேநீர் தயாரிக்கும் யோசனை உதித்தது. சில்வர் நீடில் ஒயிட் டீ வகையை விளைவிக்க, மூன்று மடங்கு, அதிக காலம் ஆகும்.

அதுபோல, உற்பத்தி செலவும், மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். அது போல், 'போ லே' வகை தேநீர், கப் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் என, நிர்ணயித்தேன்.

பணக்கார வாடிக்கையாளர்கள், இந்த தேநீரை விரும்பிக் கேட்டு பருகுகின்றனர்.இந்த டீத் துாளின் விலை, 1 கிலோ, 3 லட்சம் ரூபாய். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்- தேர்தல் கண்காணிப்புக் குழு அதிரடி!

இயற்கை விவசாயம் செய்ய மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு!

சரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)