புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டியைச் சேர்ந்த விவசாயி நல்லு. இவரது மனைவி அழகி. இவர்களுக்கு மூன்று மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.
காவலாளி
80 வயதான இந்த விவசாயி, பல ஆண்டுகள் விவசாயம் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். பின்னர் வாரிசுகள் தலையெடுத்துப் பிறகு, தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து வருகிறார். தற்போது, வயல்களைக் காவல்காக்கும் பணியில் தன் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
உணவே வேண்டாம்
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட நல்லு, கடந்த 45 ஆண்டுகளாகவே உணவு உட்கொள்வதில்லை. குறிப்பிட்டக்காலம் வரை உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்த இவர், பின்னர் உணவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
அதற்கு பதிலாக, பால், டீ, குளுக்கோஸ், சத்து மாத்திரைகள் போன்றவற்றை மட்டுமே ஆகாரமாக பயன்படுத்தி, வாழ்ந்து வருகிறார். குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், அவருக்கு எந்த குறைபாடும் இல்லை என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிராம மக்கள் உணவு உட்கொள்ள வலியுறுத்தியும், அவர் பொருட்படுத்தாமல், வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தடியில் வசித்து வருகிறார். இந்த முதியவரை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். உயிர் வாழ திட உணவு கட்டாயமில்லை என்பதை இந்த முதயவர் நிரூபித்திருக்கிறார்.
மேலும் படிக்க...