காதல் என்பது அனைவருக்கும் பொதுவானது. குறிப்பாக இளமைக்காலங்களில், வாழ்க்கைத் துணையைத் தேர்வுசெய்யும்போது, காதல் என்பது வாட்டி வதைப்பது வழக்கம்.
பொதுவாக ஜாதி, மதம், இனம், வசதிவாய்ப்பு என எந்த அளவுகோலுக்குக்கும் அடங்கிவிடாத காதலுக்கு, தொழில்கூட எந்த வகையிலும் தடையில்லை என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது இந்தக் காதல். ஏனெனில் இது மனிதக்காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது.
வைரலாகும் விஷயம்
இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணிபுரிந்த ஒருவரை அதே மருத்துவமனையில் டாகடராக பணிபுரியும் ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ஜோடி தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
மருத்துவமனையில் மலர்ந்த காதல்
பாகிஸ்தானில் கிஷ்வர் சாஹீபா என்ற பெண் டாக்டர் தெஹ்சில் ஒகாரா மாநிலத்திலுள்ள திபால்பூரில் வசித்து வருகிறார். அவர் பணிபுரியும் மருத்துவமனையில் அறையை சுத்தம் செய்யும் தொழிலாளியாக வேலைப்பார்த்தவர் ஷசாத். அவரின் எளிமையான குண நடவடிக்கையைக் கண்டு அவர் மேல் காதல் கொண்டுள்ளார் கிஷ்வர் சாஹீபா. முதன் முதலில் கிஷ்வர் தான் ஷசாத்திடம் காதலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாசாத் கேட்டபோது, நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை. கிஸ்வர் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது.
நான் அந்த மருத்துவமனையில் உள்ள அறைகளைச் சுத்தம் செய்து கொண்டும் அங்குள்ள டாக்டர்களுக்கு டீ பரிமாறும் சேவை செய்து கொண்டும் இருந்தேன்.
இது நான் சற்றும் எதிர்பாராததாகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் இருந்தது. என்னாலேயே நடப்பதை நம்ப முடியவில்லை. அதன்பிறகு சில நாட்களுக்குப் பிறகு, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம் என்றார். திருமணத்திற்குப் பிறகு அந்த மருத்துவமனையில் இருந்து கிஸ்வர் வெளியேறிவிட்டார்.
தற்போது அவர்கள் அதே ஊரிலேயே கிஸ்வருக்காக ஒரு கிளினிக் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் இந்த ஜோடி தங்களுக்கு என ஒரு யூடியூப் சேனலை உருவாக்கிக் கொண்டு அதில் தங்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பற்றிய பல முக்கிய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டு பார்வையாளர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். டாக்டர் கிஷ்வர் சாஹிபா கூறியதாவது:- ஷசாத்துடன் அற்புதமான திருமணவாய்ப்பை இழக்க விரும்பாததால் நான் ஷசாத்திடம் காதலை வெளிப்படுத்தினேன் என்று கூறினார்.
மேலும் படிக்க...
95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்- அதிர்ச்சியில் கூலித்தொழிலாளி!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.5600 சம்பளம்-இதுவும் சூப்பர் பிஸ்னஸ்தான்!