சிறு சேமிப்புத் திட்டங்களில் மாத வருமான திட்டம் (Monthly Income Scheme) பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அஞ்சல் அலுவலகம் வழியாக முதலீட்டை தொடங்கலாம். அஞ்சல் அலுவலகத்தில் சேமித்தால், வங்கிகளை விட அதிக வட்டி கிடைக்கிறது.
சிறுசேமிப்பு திட்டம் (Savings Scheme)
தற்போது மாத வருமான திட்டத்தில் ஆண்டுக்கு 6.6% வட்டி கிடைக்கிறது. ஒவ்வொரு காலாண்டுக்கும் எவ்வளவு வட்டி விகிதம் விதிக்கப்படும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். ஆனால் தொடர்ந்து பல காலாண்டுகளாக வட்டியில் மாற்றம் இல்லாமல் உள்ளது. குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
கூட்டு கணக்கில் (Joint account) 9 லட்சம் ரூபாய் வரை அதிகபட்சமாக முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கில் அதிகபட்சம் மூன்று நபர்கள் வரை இருக்கலாம். 18 வயதுக்குட்பட்டவர்கள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கிய தேதியில் இருந்து ஒவ்வொரு மாதம் முடிவிலும் வட்டித் தொகை செலுத்தப்படும்.
மெச்சூரிட்டி வரையில் ஒவ்வொரு மாதமும் இதேபோல் வட்டி வருமானம் வரும். வட்டித் தொகையை அதே அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். மாத வருமானத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி ஐந்து ஆண்டுகளில் கணக்கை மூடிவிடலாம். கணக்குதாரர் இறந்துவிட்டால் வாரிசுகள் அல்லது நாமினிக்கு பணம் சேரும்.
மேலும் படிக்க
SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி: மீண்டும் வட்டி உயர்வு!
Post Office: தினமும் 50 ரூபாய் சேமித்தால் 35 லட்ச ரூபாய் உங்கள் கையில்!