இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 20 August, 2022 9:56 AM IST

அமெரிக்காவின் டென்னசியில் சிறையில் இருக்கும் காதலனை பார்க்க சென்ற காதலி கொடுத்த முத்தத்தால் காதலன் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் முத்தம்

விஷயம் என்னவென்றால், காதலி முத்தம் மூலம் கொடுத்த போதைப் பொருட்களை, காதலன் அதிகளவில் விழுங்கியதே மரணத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

சிறை தண்டனை

போதைப்பொருள் வழக்கில் ஜோசுவா பிரவுன் என்பவருக்கு 2029 வரை 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். போதை பொருள் பயன்படுத்தும் பழக்கத்தால் அவர் சிறையில் போதைபொருள் கிடைக்காமல் தவித்தார்.

இதுதொடர்பாக தன்னை பார்க்கவந்த காதலி ரேச்சல் டொலார்ட்டிடம் கூறினார். எனவே தன் கணவனுக்கு உதவ நினைத்த ரேச்சல், அதற்காகத் திட்டமிட்டார். அடுத்த முறை காதலனை பார்க்க சென்றபோது தன் காதலனுக்கு நீண்ட நேரம் முத்தம் கொடுத்தார். இதில் ஜோசுவா பிரவுன் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.

விசாரணையில் தகவல்

ஜோசுவாவின் மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அதிகளவிலான போதைப் பொருட்களை விழுங்கியதே மரணத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

அதாவது, போதைப்பொருள் கிடைக்காமல் சிறையில் தவித்த காதலைனை பார்க்க சென்ற காதலி வாயில் போதைப்பொருள் வைத்திருந்தார். முத்தமிடும் சாக்கில் அவர் வாயில் இருந்து போதை மருந்துகளை காதலன் வாயில் போட திட்டம் தீட்டி இருந்தார்.

ஆனால் போதைப்பொருள் கிடைத்த மகிழ்ச்சியில் காதலன் 14 கிராம் போதைப்பொருளை மொத்தமாக விழுங்கினார். அதுவே விஷமாகி அவரது உயருக்கு உலை வைத்துவிட்டது. அவரது வயிற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில், ரேச்சல் டொலார்ட்டை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

English Summary: A kiss of desire given by a lover - the death of a lover!
Published on: 20 August 2022, 09:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now