விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று தேவையான இடுபொருட்களை வழங்கும் செயலில் விதை சான்றளிப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 75 லட்சம் தக்காளி நாற்றுகளை வினியோகம் செய்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு நடவடிக்கைகளால் பெரும்பாலான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் வேளாண் பணிகள் மட்டும் தொய்வின்றி நடைபெற அனைத்து துறையும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. விதை சான்றளிப்பு துறை விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான விதைகள், காய்கறி நாற்றுக்கள், இயற்கை உரங்கள் போன்றவற்றை மானிய விலையில் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்ற இயலும். பண்ணைகளில் மற்றும் கடைகளில் விவசாயிகள் கூடுவதை முற்றிலும் தவிர்க்க முடியும். விரைவில் நடமாடும் உரக்கடைகள் துவக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த இரு தினங்களில், சுமார் 75 லட்சம் தக்காளி நாற்றுக்களை வழங்கி சாதனை படைத்துள்ளனர். வேளாண் விரிவாக்க மையங்கள் இத்திட்டத்தை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த, விதை சான்றளிப்பு துறையின் இயக்குனர், உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு போதியளவு விதைகள், இயற்கை உரங்களை வழங்க அறிவுறுத்தினார். அத்துடன் விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, சில்லரை விற்பனை மையங்களில் உள்ள விதை மாதிரிகளை ஆய்வு செய்யவும், உத்தரவிட்டுள்ளார்.