Blogs

Saturday, 01 January 2022 08:08 AM , by: R. Balakrishnan

Aavin Milk Card

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த 16.05.2021 முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இந்த விலைக்குறைப்புக்கு பின் ஆவின் பால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆவினின் அடையாளமாக பொதுமக்களுக்கு அதிகபட்ச விலையில் இருந்து மேலும் குறைத்து சலுகை விலையில் பால் அட்டை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமன்படுத்தப்பட்ட பால் (நீலம் - Blue) :

  • அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 40 ரூபாய்
  • பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 37 ரூபாய்

நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை - Green):

  • அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 44 ரூபாய்
  • பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 42 ரூபாய்

நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு - Orange):

  • அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 48 ரூபாய்
  • பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 46 ரூபாய்

விண்ணப்பம் (Application)

அனைத்து பொது மக்களும் இத்தகைய சலுகையை பெற ஜனவரி மாதம் முழுவதும் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஆவின் அதிநவீன பாலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் (Applications) வழங்கப்படுகிறது.

பால் அட்டை (Milk Card)

ஆவின் பால் அட்டையை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கும் பட்சத்தில் உடனடியாக பால் அட்டை வழங்கப்படும். பாலகங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டும் மறுநாள் ஆவின் வட்டார அலுவலர்கள் மூலம் பால் அட்டை வழங்கப்படும். மேலும், கீழ்க்கண்ட இணையதளம் வாயிலாகவும் புதிய பால் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். www.aavin.tn.gov.in & www.aavinmilk.com

இந்த சலுகை பால் அட்டை பொது மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகைக்கு கொள்முதல் செய்ய பன்னீர் கரும்புகள் தயார்!

தக்காளியை பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)