சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 1 September, 2022 7:15 PM IST
Accident Insurance for Rs.10 Lakhs at Rs.399 - Postal Bank Introduces!

விபத்து காப்பீடு என்பது தற்போதைய அவசர உலகில் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. இதனைக் கருத்தில்கொண்டு,வெறும் 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தபால்துறை வங்கி. 5 நிமிடங்களில் காப்பீடு திட்டத்தில் இணையலாம் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம்.

தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி, டாடா ஏ.ஐ.ஜி., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வயது வரம்பு

இதில் 18 முதல் 65 வயது உள்ளவர்கள் சேரலாம், தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் மூலம் விரல் ரேகையை பதிவு செய்து ரூ. 399 செலுத்தி5 நிமிடங்களில் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர மற்றும் பகுதி ஊனம், பக்கவாதம் ஏற்பட்டால், 10 லட்சம் வரையிலும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வழங்கப்படும்.

கல்விஉதவி

புற நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் 30 ஆயிரம், விபத்தில் மரணம், பக்க வாதம் ஏற்பட்டவரின் இரு குழந்தைகள் கல்வி செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.

பொன்னான வாய்ப்பு

விபத்து நேரங்களில் ஏற்படும் நிதி நெருக்கடி உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தினரின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். திருப்பூர் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

English Summary: Accident Insurance for Rs.10 Lakhs at Rs.399 - Postal Bank Introduces!
Published on: 01 September 2022, 07:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now