நாடு முழுவதுமுள்ள இயலாத மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு இலவச இ-ரிக்ஷாக்கள் வழங்கவுள்ளதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 100 பேருக்கு வழங்கினார்.
கொரோனா நெருக்கடி காலத்தில் எழைகளின் காப்பாளனாய் விளங்கிய பாலிவுட் நடிகர் தொடர்ந்து பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகிறார். கொரோனா பொதுமுடக்கத்தின் போது பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப நடிகர் சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். பல்வேறு இடங்களில் முகாம்களை அமைத்து உணவுத்தேவைகளையும் பூர்த்தி செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார்.
ஏழை மக்களுக்கு இ-ரிக்ஷா
இந்நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள இயலாத மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இ-ரிக்ஷாக்களை இலவசமாக வழங்கவுள்ளதாக நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார். அதன் முதற்கட்டமாக தனது சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம், மோகாவில் நலிவடைந்த ஏழை மக்கள் 100 பேருக்கு இ-ரிக்ஷாக்களை வழங்கினார்.
நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்
இதுகுறித்து பேசிய பாலிவுட் நடிகர் சோனு சூட், உத்தரப் பிரதேசம் முதல் பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆதரவற்ற ஏழை-எளிய மக்களுக்கு உதவும் வகையில் இலவச இ-ரிக்ஷாக்களை வழங்கப் போவதாக தெரிவித்தார்.
கொரோனாவுக்குப் பிறகு பெரும்பாலான மக்களுக்குத் தங்கள் வேலை தக்கவைத்துக் கொள்வதே மிகக் கடினமாகவிட்ட நிலையில், மக்கள் சுய சார்புடன் தங்கள் சொந்த உழைப்பில் தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். எனவே, நலிவடைந்த ஏழை-எளியோருக்கு உதவ இ-ரிக்ஷாக்கள் ஒரு நல்ல வழியாக இருக்கும் என்று நினைத்து வழங்கி வருவதாக கூறினார்.
மேலும் படிக்க..
உணவுப் பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க சீரிய நடவடிக்கை - மத்திய அரசு!!
திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்! கரூர் பெட்ரோல் பங்கின் சூப்பர் அறிவிப்பு!
உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் வேளாண் கருவிகளை வாங்கலாம்! திருவாரூர் மாவட்ட வேளாண் துறை தகவல்!