புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், பேராசிரியருமான எம்.எஸ். ரெட்டி இன்று டெல்லியிலுள்ள கிரிஷி ஜாக்ரான் ஊடக நிறுவனத்தின் தலைமையிடத்தை பார்வையிட்டு, அங்கிருந்த இளம் பத்திரிகையாளர்களுக்கு தனது அனுபவத்திலிருந்து நிலையான விவசாயம் பற்றிய குறிப்புகளை பகிர்ந்து கொண்டார்.
நிலையான வேளாண்மைக்கான ஆசிய பிஜிபிஆர் சொசைட்டியின் (Asian PGPR Society for Sustainable Agriculture) நிறுவனரும், அதன் தலைவருமான பேராசிரியர் எம்.எஸ். ரெட்டி கிரிஷி ஜாக்ரான் அலுவலகத்திற்கு வருகைத் தந்திருந்தார். அதன்பின், கே.ஜே.சௌபாலில் ஏற்பாடு செய்யப்பட்ட அமர்வில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினரை வரவேற்று கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்சர் வேல்ர்ட் ஊடக நிறுவனருமான எம்.சி.டொம்னிக் வாழ்த்துரை வழங்கினார். “ பேராசிரியர் எம்.எஸ்.ரெட்டி, வேளாண் துறை சார்ந்து உலகளாவிய தான் கற்றுணர்ந்த அனுபவங்களை, தற்போது இச்சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்” என தனது வாழ்த்துரையின் போது எம்.சி.டொம்னிக் மனம் திறந்து பாராட்டினார்.
வேளாண் அறிவியலில் பேராசிரியர் ரெட்டியின் பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஏராளமான இளங்கலை பட்டதாரி, முதுகலை பட்டதாரி மற்றும் வேளாண் துறை விஞ்ஞானிகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் பயிற்சி அளித்துள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இவரது சேவையினை பாராட்டி உரிய விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் உயர்கல்வி படிப்பை முடித்த நிலையில், வேளாண் துறை சார்ந்து கனடா மற்றும் அமெரிக்காவில் பணியாற்றியுள்ளார். ஏறக்குறைய 45 நாடுகளுக்கும் மேலாக பயணித்துள்ள பேராசிரியார் அங்குள்ள மாணவர்களுக்கு வேளாண் துறை சார்ந்த நுண்ணறிவினை வழங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 561 மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியதன் வாயிலாக அவரது அர்ப்பணிப்பு உணர்வு நமக்கு புலப்படுகிறது. இவரிடம் கற்ற பலர் வெற்றிகரமாக கிரீன் கார்டுகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் குழுமியிருந்த இளம் ஊடகவியலாளர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் எம்.எஸ்.ரெட்டி தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-
"நான் அடிப்படையில் ஒரு விவசாய விஞ்ஞானி, விதை தரம் மற்றும் விவசாய நடைமுறைகளை மேம்படுத்த முயற்சிப்பவன். ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு உற்பத்தியை உறுதிசெய்ய இயற்கை விவசாய முறைகளை பரிந்துரைக்கிறேன்," என்றார். மேலும் பேசுகையில், “ அரசாங்கத்துடன் இணைந்து சில நேரங்களில் AI மற்றும் மரபணு எடிட்டிங் உதவியுடன் வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் இயற்கை விவசாயத்துடன் சமூகத்திற்கு உதவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும்" தான் ஆற்றிய பணிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்த தொழில்நுட்பம் மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு உணர்வானது, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எதிர்க்கால விவசாய சமூகத்திற்கான தொலைநோக்கு அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்கடன்- ஆட்சியர் அழைப்பு
Swaraj 8200 ஸ்மார்ட் அறுவடை இயந்திர உற்பத்திக்கு பிதாம்பூரில் பிரத்யேக ஆலை!