ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், மானியங்களையும் வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில், உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களின் சாகுபடியை அதிகரிப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் வாயிலாக செயல் படுத்தப் படும் திட்டங்கள் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், பாசன கருவிகள், நுண்ணுாட்ட சத்துக்கள், நுண்ணீர் பாசன கட்டமைப்புகள், கால்நடைகள்போன்றவற்றை இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கி வருகின்றன. மேலும் விவசாயிகளுக்கு 'பென்ஷன்' திட்டம், உதவித் தொகை என மத்திய அரசால் அறிமுக படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நல திட்டங்கள் அறிமுக படுத்தப்பட்ட போதிலும் ஒரு சில மாவட்டங்களில் முழுமையாக சென்றடையவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. அரசு வழங்கும் முழு நிதியை செலவிடுவதில்லை என்றும், தகுதியான பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் உள்ளிட்ட பல்வேறு வேளாண் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற அதிகாரிகளிடம் நல திட்டங்கள், சாகுபடி திட்டங்கள் அனைத்தும் தாமதப்படுத்தாமல், விரைவுவில் பயனாளிகளுக்கு சென்றடைய உத்தரவிட்டுள்ளார்.