மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 April, 2020 7:28 PM IST

விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு வேளாண் மீதான தடை உத்தரவை நீக்கியதை அடுத்து, அதற்கு தேவையான இடுபொருள், உரம்  விற்பனை மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் பணிகள் தடையின்றி நடைபெற தினமும் காலை, 8.00 மணி முதல் 11.00 மணி வரை செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

வேளாண் துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விற்பனை மையங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு  யூரியாவை விற்பனை செய்தாலோ அல்லது அத்துடன் பிற உரங்களைச் சேர்த்து வாங்கும்படி வற்புறுத்தினாலோ, அவர்களின் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985ன்படி  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தற்போது டெல்டா மாவட்டங்களில் நெல், உளுந்து, பருத்தி போன்ற கோடை பருவ சாகுபடி பயிர்களுக்கு உரமிடுவதற்காக போதிய யூரியா உரம் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து சரக்கு ரயில் மூலம் 1,200 டன்கள் யூரியா உரம் தஞ்சைக்கு வந்து சேர்ந்தது. இதல், 450 டன்கள் யூரியா உரம் திருவாரூர் மாவட்டத்துக்கும், மீதமுள்ள 750 டன்கள் யூரியா உரம் தஞ்சாவூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார். மேலும் கூடுதலாக, 2,000 டன்கள் யூரியா வார இறுதியில் வரவுள்ளன என தெரிவித்தார். மேலும் விவசாயிகளும், விற்பனையாளர்களும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

  • விற்பனையின் போது நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பி.ஓ.எஸ். இயந்திரங்களின் மீது கிருமி நாசினி  பயன்படுத்த வேண்டும்.  அனைவரும் முறையான சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • விற்பனையாளர்கள் அல்லது விற்பனை மையங்கள் பி.ஓ.எஸ். இயந்திரம் மூலம் ரசீது போடாமல் விற்பனை செய்ய கூடாது.
  • கடைக்கு வரும் விவசாயிகள் பொருட்களை வாங்கிய உடன் கலைந்து செல்வதை விற்பனை மையங்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் , இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், விவசாயிகள்அப்பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மற்றும் தரக் கட்டுப்பாடு உதவி இயக்குநரிடம் தெரிவிக்கலாம்.

English Summary: Agriculture Department Announced Adequate Urea Arrived At Delta Region For Summer Cultivation
Published on: 03 April 2020, 07:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now