தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை விவசாயிகளுக்கு கை மற்றும் விசைத் தெளிப்பான்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு சிக்கன நீர் பாசனத்திற்காக விவசாயிகளுக்கு மானிய விலையில் இயந்திரங்களை வழங்கி வருகிறது. சொட்டு நீர், மழைத்தூவான், நீர் தெளிப்பான் உள்ளிட்ட வேளாண் கருவிகளுக்கு 100% வரை மானியம் வழங்கப் பட்டு வருகிறது.
சிக்கன முறையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதன் மூலம் அதிக அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியும். தெளிப்பான் நீர் பாசனம் சமவெளி பரப்பு, மலை பிரதேசத்திற்கு மிகவும் ஏற்றது. பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவது எளிது. ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் தண்ணீர் தெளிப்பான் மூலம் ஒரு எக்டருக்கு பாய்ச்சலாம் என்பது இதன் சிறப்பு. இந்த கருவிகள் மூலம் நீர் பாய்ச்சினால் அதிக மகசூல் கிடைக்கும்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், கை மற்றும் விசைத் தெளிப்பான்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படுவோர் சிட்டா, ஆதார், வங்கி பாஸ் புக் நகலுடன் வேளாண் அலுவலகத்தை அணுகலாம் என, வேளாண் உதவி இயக்குநர் உமா தெரிவித்தார்.