Blogs

Wednesday, 18 March 2020 12:34 PM , by: Anitha Jegadeesan

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20)  திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் என வேளாண்துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரியப் படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மார்ச் மாதத்துக்கான விவசாயகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற உள்ளது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் அதன் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இதில் கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள், தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க இருப்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)