நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 August, 2023 2:07 PM IST
AI Sticker Feature in WhatsApp beta users How to Create

WhatsApp-ல், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முதல் அம்சம் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இனி ஒருவருடன் உரையாடும் போது வழக்கமாக அனுப்பும் ஸ்டிக்கர்களுக்கு பதிலாக AI ஸ்டிக்கர்களை உருவாக்கி அனுப்பும் வசதி தான்.

தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி, ஆண்ட்ராய்டு 2.23.17.14 புதுப்பித்தலுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் (WhatsApp beta version-users) தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே AI ஸ்டிக்கர்களை உருவாக்கும் வசதி தற்போது கிடைத்துள்ளது.

புதிய அம்சத்தின் சிறப்பு என்னவென்றால், பயனர்கள் ஸ்டிக்கர் எந்த வகையில் வேண்டும் என விரிவாக விளக்கினால் போதும், அதற்கேற்ப AI தொழில்நுட்ப உதவியுடன் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டிக்கர்களை உருவாக்கி உங்களுக்கு வழங்கும். இந்த அம்சம் விரைவில் உலகம் முழுவதும் உள்ள WhatsApp பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுக்குறித்து WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அம்சமானது தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சோதனையாளர்களுக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஸ்டிக்கர்களைப் போலவே, AI-ஸ்டிக்கர் வசதியானது ஸ்டிக்கர்ஸ் என்கிற ஆப்ஷனில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டிக்கரை உருவாக்க, பயனர்கள் புதிய AI-ஸ்டிக்கர் உருவாக்கு பொத்தானைத் தட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

WhatsApp-ல் AI- ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி?

  • வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்துக் கொள்ளவும்(தற்போது beta user- ஆக இருப்பின்)
  • நீங்கள் யாருக்கு மெசேஜ் செய்ய விரும்புறீங்களோ? அவர்களது chat box திறக்கவும்
  • வழக்கமான ஸ்டிக்கர்கள் சாளரத்தைத் திறக்க கீழே அமைந்துள்ள ஸ்மைலி ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் AI ஸ்டிக்கர்களை உருவாக்குவதற்கான ஆப்ஷன் தென்படும். அதில் "உங்கள் சொந்த AI ஸ்டிக்கரை உருவாக்கு" தாவலைக் கிளிக் செய்யவும்.
  • 'உருவாக்கு' (create) என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் உருவாக்க விரும்பும் ஸ்டிக்கரின் விவரங்களை விவரிக்கவும்.
  • உங்கள் விளக்கத்தின் அடிப்படையில் இந்த அம்சம் பல்வேறு விதமான ஸ்டிக்கர்களை உருவாக்கி உங்களுக்கு வழங்கும்.

மாறிவரும் டெக் உலகில் AI தொழில்நுட்ப தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், WhatsApp செயலியும் அதனை தன்னுடன் இணைத்துள்ளது பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டிக்கர் ஆப்ஷனாக WhatsApp செயலிக்குள் முதல் அடி எடுத்துள்ள AI தொழில்நுட்பம் இனி வருங்காலங்களில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் கைப்பற்றியதன் மூலம் பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஸ்கிரீன்-ஷேரிங் என்கிற வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. இதற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், போட்டி அரட்டை செயலிகளுக்கும் சவால் விடும் நோக்கில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

அரசு ஊழியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம்- மத்திய அரசு அறிவிப்பு

Snake Plant முதல் Cacti வரை- தண்ணீரை கொஞ்சமா குடிக்கும் 7 தாவரங்கள்

English Summary: AI Sticker Feature in WhatsApp beta users How to Create
Published on: 21 August 2023, 02:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now