Blogs

Tuesday, 19 July 2022 11:10 AM , by: Elavarse Sivakumar

வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலரது ஆசையாக இருக்கும். அப்படி விருப்பம் உள்ளவரா நீங்கள்? எனில் இந்த செய்தி உங்களுக்கானதுதான். ஐஆர்சிடிசி மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், பல நல்ல சலுகைகளை பெறலாம். இங்கு நீங்கள் வெறும் 100 ரூபாய்க்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

காப்பீடு

அதே போல் இந்த சலுகைகளின் கீழ் 50 லட்ச ரூபாய் காப்பீட்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது நீங்கள் மிகக் குறைந்த செலவில் விமானத்தில் பயணம் செய்யலாம்.

கூடுதல் சலுகைகள்

ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஐஆர்சிடிசி ஏர் ஆப் (IRCTC Air App) மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், பல நன்மைகளைப் பெற வாய்ப்பு கிடைக்கிறது.

என்னென்ன சலுகைகள்

ஐஆர்சிடிசி ஏர் இணையதளத்தின்படி, நீங்கள் எஸ்பிஐ கார்டு பிரீமியர் மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தினால், அதன் மதிப்பில் 5%-ஐ திரும்பப் பெறுவீர்கள். இது தவிர, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டில் பணம் செலுத்தி விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், 7% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை ஜூலை 30 வரை மட்டுமே.
அதே நேரத்தில், இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் புதன்கிழமைகளில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.

முக்கிய அம்சங்கள்

  • ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ. 59 கன்வீனியன்ஸ் ஃபீஸ் விதிக்கப்படுகிறது.

  • ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால், 50 லட்சம் வரையிலான இலவச பயணக் காப்பீட்டு வசதியைப் பெறுவீர்கள்.

  • ஐஆர்சிடிசி பல சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்குகிறது.

  • எல்டிசி டிக்கெட் முன்பதிவுக்காக தனித்தனியாக அரசு சான்றளிக்கப்பட்ட நிறுவனம் உள்ளது.

  • ஐஆர்சிடிசி சிறப்பு பாதுகாப்பு கட்டணத்திலும் தள்ளுபடி வழங்குகிறது.

விமான டிக்கெட் முன்பதிவு

  • டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, முதலில் air.irctc என்ற ஐஆர்சிடிசியின் அதிகாரபூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.

  • பின்னர் உங்கள் ஐஆர்சிடிசி ஐடி-யில் லாக் இன் செய்யவும்.

  • அதன் பிறகு புறப்படும் மற்றும் சென்று சேரும் இடங்களை நிரப்பவும்.

  • இதற்குப் பிறகு, சலுகைகளைச் சரிபார்த்த பிறகு, கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் படிக்க...

குறைந்தது எண்ணெய் விலை-இல்லத்தரசிகளுக்கு நிம்மதி!

ரூ.63,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாயப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)