திருநெல்வேலி மாவட்டத்தில் எவ்வளவு நீர் சென்றாலும் நிரம்பாத அதிசய கிணறு இருப்பதாக தகவல் பரவியதையடுத்து இதனைப் பார்க்க ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை அடுத்த ஆயன்குளம் பகுதியில் தான் இந்த அதிசய கிணறு உள்ளது.
அதிசய கிணறு (Amazing Well)
கடந்த சில வாரங்களாக கொட்டித்தீர்த்த பருவமழையின் காரணமாக கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்படி, 50 கன அடி நீர் இந்த கிணற்றினுள் பாயும்போது கிணறு நிரம்பாமல் உள்ளது. கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர், இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், உப்பு நீர் அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் துணை புரிவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நிரம்பாத கிணறு (Well Not filled)
பெருமழை பெய்தபோதும், இதுவரை இந்த கிணறு நிரம்பி தாங்கள் பார்த்தது இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளச் சேதத்தைத் தடுக்க அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியான அபூர்வா, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் இந்த கிணற்றை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் சென்னை ஐஐடி பேராசிரியர்களை கொண்ட நிபுணர்கள் குழு இன்று திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் அதிசய கிணற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க
மழையால் பாதித்த 20,000 ஏக்கர் பயிர்கள்: பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்: பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட வாகனஓட்டிகள்!