Blogs

Friday, 27 November 2020 02:00 PM , by: Daisy Rose Mary

எழை எளிய பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2633 வாகனங்களுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், தகுதியுள்ள பெண் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் ஏழை எளிய பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 2020-21-ம் ஆண்டுக்கு ஊரகப் பகுதிகளுக்கு 2030, மற்றும் நகர்புற பகுதிகளுக்கு 603 என மொத்தம் 2633 பெண்களுக்கு வாகனம் வாங்க மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீதம் தொகை, இரண்டில் எது குறைவோ அந்த தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக பட்சமாக ரூ.31,250 வழங்கப்படும். மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

மானியம் பெற தேவையான தகுதி

  • பயனாளிகள் 18 முதல் 45 வயதுக்குள் உள்ள வராக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகன ஓட்டுநர் அல்லது பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • ஆதிதிராவிட பெண்களுக்கு 21 சதவீதம், மலைவாழ் பெண்களுக்கு ஒரு சதவீதம், மாற்றுத் திறனாளி பெண்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.

  • விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

  • படிவத்தை இணையத்தில் டவுண்லோடு செய்ய... இங்கே கிளிக் செய்யவும்   

மேலும் படிக்க...

நாளொன்றுக்கு 4 மணிநேரம் வேலை... மாதத்திற்கு ரூ.70,000 சம்பளம்! சம்பாதிக்க ரெடியா?

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள்! - போலீசார் விரட்டியடிப்பால் பரபரப்பு!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)