மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 January, 2023 8:56 PM IST

திருடும் கைக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என  பொதுவாக, பொருளை இழந்தவர்கள் ஆதங்கப்படுவது உண்டு. ஆனால் தண்டனைகள் கொடுமையானதாக மாறும்போது, குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்பும்  அதிகரிக்கிறது.  இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த நாட்டில், இப்படியொரு விநோத தண்டனை அரங்கேற்றப்பட்டுள்ளது.

கடுமையான விதிகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகளை கொண்டு வந்துள்ளனர்.

தண்டனைகள்

இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் சமீபத்தில் அறிவித்தனர். கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

கைகள் துண்டிப்பு

இந்தநிலையில் திருடிய குற்றத்துக்காக 4 பேரின் கைகளை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கந்தகாரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திருட்டு உள்ளிட்ட குற்றசாட்டப்பட்ட 9 பேரை அழைத்து வந்தனர். அவர்களுக்கு 35 முதல் 39 முறை கசையடி அளிக்கப்பட்டது. பின்னர் திருட்டு குற்றத்துக்காக 4 பேரின் கைகளை வெட்டி துண்டித்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு கடந்த மாதம் 7-ந்தேதி பரா மாகாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர். இதேபோல் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்ற தண்டனைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதும் அதை தலிபான்கள் அரசு கண்டு கொள்ளவில்லை.

மேலும் படிக்க…

ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட 3வயது குழந்தை - அமெரிக்காவில் கொடூரம்!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: Amputation of hands for stealing!
Published on: 18 January 2023, 08:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now