தொடக்கத்தில் தன் வீட்டிற்கு செல்லும் நீர்ப்பாதையில் இருந்த களையினை சுத்தம் செய்ய முன்வந்த நபர் கடந்த மூன்று மாதங்களாக புல்லாந்தி ஆற்றின் சீரான நீர் ஓட்டத்தினை உறுதி செய்ய தனி நபராக அனில்குமார் என்பவர் போராடி வருகிறார்.
வைக்கம் அருகே உள்ள செம்பு பஞ்சாயத்து ஒன்பதாவது வார்டு (ஏனாடி) செருத்துருத்து என்ற இடத்தில் உள்ள 52 வயதான அனில்குமார் என்பவரின் வீடு உள்ளது. சாலை வசதியற்ற செருத்துருத்து, கட்டித்தரை பகுதி மக்கள் வெளியுலகுடன் தொடர்பு கொள்ள புல்லாந்தி என்கிற ஆற்றின் நீர்வழிப்பாதையை தான் நம்பி உள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆற்றினை களைகள் ஆக்கிரமிக்கும் போது போக்குவரத்து வசதி துண்டிக்கப்படுகிறது.
நீர்வழிப்பாதையை தூர்வாரக்கோரி கிராம பஞ்சாயத்தை அணுகியும், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் கூட இவர்களின் முறையீடுகளுக்கு செவிசாய்க்கவில்லை.அதனால் வேறு வழியில்லாமல், நானே களைகளை அகற்ற முடிவு செய்தேன், என்கிறார் அனில்.
கடந்த மூன்று மாதங்களாக டி.ஏ.அனில்குமார் காலை 8 மணி முதல் ஆற்றில் களையெடுக்கும் பணிபுரிகிறார். ஒவ்வொரு நாளும், அவர் மூவாட்டுப்புழா ஆற்றின் கிளை நதியான புல்லாந்தியில், 10 மீட்டர் நீளமுள்ள கம்பத்தின் முனையில் அரிவாளை இணைத்து ஒரு நாட்டுப் படகில் சென்று தண்ணீரில் இருந்து களைகளையும் கழிவுகளையும் அகற்றுகிறார். மர ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வரும் அனில்குமார் தனது தொழில்முறை நடவடிக்கைகளை ஆரம்பக்கட்டத்தில் நிறுத்திவிட்டு, அவரது வீட்டிற்கு செல்லும் ஒரே பாதையினை ஆக்கிரமித்திருந்த களைகளை அகற்ற துவங்கினார்.
இதுகுறித்து அனில்குமார் தெரிவிக்கையில், எங்கள் வீடுகளுக்குச் செல்ல சாலை வசதி இல்லை. ஒரே வழி ஆற்றின் குறுக்கே அமைந்த்ள்ள மரபாலம் தான். அவசரக்காலத்திலும் மக்கள் இதனை பயன்படுத்த இயலாது. 10 மீட்டர் அகலமுள்ள ஆற்றில் நீர்வாழ் தாவரங்களின் வளர்ச்சியால் மேற்பரப்பு நீரின் ஓட்டம் முழுமையாக நின்று குப்பைகள் குவியத்தொடங்கும் . இங்கு சுமார் 15 குடும்பங்கள் உள்ளன. நீர்வழியை சுத்தப்படுத்துவது நேரடியாக பயனளிப்பதோடு ஆற்றின் இரு கரையோரம் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கும் மறைமுகமாக நன்மையளிக்கும் என்றார்.
தற்போது அனில் கட்டித்தரா-சேரட்டுப்புழா-கல்லுகுத்துக்கடவ் பாதையில் 2 கிலோமீட்டர் தூரத்தை சுத்தப்படுத்தியுள்ளார். மேலும் ஏனாடி- துருத்துதும்மாவை இணைக்கும் பாலத்தில் முதல் கட்ட தூய்மைப்பணியினை முடித்துள்ளார்.
இவரது நடவடிக்கையினால் ஈர்க்கப்பட்டு எதிர்முனையிலிருந்து துப்புரவு பணியினை மக்கள் கூட்டமைப்பினர் தொடங்கியுள்ளது. கல்லுகுத்துகடவிலிருந்து களைகளை அகற்றும் பணியின் கூட்டுக்குழுவிற்கு தலைவராக அனில் இருக்கிறார். காலையில் தனது சொந்த வேலைகளை முடித்துவிட்டு குழுவுடன் இணைந்து களைகளை அகற்றும் பணியில் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
மதுரையில் முதல்வர்- கோரிக்கைகளை அடுக்கிய தென் மண்டல மாவட்ட விவசாயிகள்
சாரஸ் மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சியை தொடங்கிவைத்த உதயநிதி