Blogs

Saturday, 23 January 2021 05:40 PM , by: Daisy Rose Mary

Credit : Education news

வேளாண்மை அல்லது அதனுடன் தொடர்புடைய துறையில் படித்து முடித்து வேலை தேடுவோருக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) மூத்த ஆராய்ச்சியாளர்கள் (SRF) இளம் நிபுணத்துவம், தொழில்நுட்ப உதவியாளர் (YP-II) மற்றும் கள உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு ஆர்வமுள்ள தகுதியான நகர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக படித்து அதற்கேற்ப விண்ணப்பிக்கலாம்.

மூத்த ஆராய்ச்சியாளர்கள் (Senior Research Fellow -SRF )

  • ஆராய்ச்சி தொடர்பான பிரிவுகளில் பணிபுரிய மூத்த ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்.

  • கல்வித் தகுதி - துறைசாந்த முதுகலை அறிவியல் பட்டப்படிப்பு (பச்சை வாயுக்கள்/மண்ணியல் அறிவியல்/சூழ்நிலை அறிவியல்) CSIR/UGC/ICAR NET தகுதியுடைய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • சம்பளம் - ரூ.31,000/ மாதம்

  • வயது வரம்பு - அதிகபட்ச வயது 35 வயது

  • பணியிடம் - புது டெல்லி

  • கடைசி தேதி - பிப்பரவரி 8, 2021

இளம் நிபுணர் (Young Professional - YP-II)

  • வேளாண் ஆராய்ச்சி தொடர்பான பிரிவுகளில் பணிபுரிய இளம் நிபுணத்துவ தொழில்நுட்ப பிரிவு பணியிடங்கள்.

  • கல்வித் தகுதி - துறைசாந்த முதுகலை அறிவியல் பட்டப்படிப்பு (பச்சை வாயுக்கள்/மண்ணியல் அறிவியல்/சூழ்நிலை அறிவியல்) CSIR/UGC/ICAR NET தகுதியுடைய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • சம்பளம் - ரூ.35,000/ மாதம்

  • வயது வரம்பு - அதிகபட்ச வயது 35 வயது

  • பணியிடம் - புது டெல்லி

  • கடைசி தேதி - பிப்பரவரி 8, 2021

கள உதவியாளர் (Field Assistant)

  • வேளாண் ஆராய்ச்சி தேவைக்கான தளங்களுக்கு சென்று பணிபுரிய கள உதவியாளர் பணியிடங்கள்

  • கல்வித் தகுதி - குறைந்த அளவு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முறையான வகையில் மாநில பள்ளிக்கல்வி முடித்திருக்க வேண்டும். மேலும், உரங்கள் மற்றும் கழிவுகள் கையாள்வதில் குறைந்தபட்ச அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • சம்பளம் - ரூ.17,069/ மாதம்

  • வயது வரம்பு - அதிகபட்ச வயது 35 வயது

  • பணியிடம் - புது டெல்லி

  • கடைசி தேதி - பிப்பரவரி 8, 2021

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant Post)

  • வேளாண் ஆராய்ச்சி குறித்த தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்

  • கல்வித் தகுதி - விண்ணப்பிப்பவர் குறைந்த பட்சம் 12ம் வகுப்பும், மாநில பள்ளிக் கல்விப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • சம்பளம் - ரூ.18,000/ மாதம்

  • வயது வரம்பு - அதிகபட்ச வயது 35 வயது

  • பணியிடம் - புது டெல்லி

  • கடைசி தேதி - பிப்பரவரி 8, 2021

IARI Recruitment 2021 விண்ணப்பிப்பது எப்படி?

கொரோனோ பரவல் காரணமாக நேர்முக வருகை தடுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் உங்கள் கல்விச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அதனுடன் சேர்ந்த விண்ணப்பப் படிவித்தை sureshcescra@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் பிப்ரவரி 8ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வுசெய்யப்பட்ட நபர்கள் பிப்ரவரி 15 தேதி நடைபெறும் ஆன்லைன் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். அனைத்து பணியிடங்களும் தற்காலிக பணியிடங்கள் மட்டுமே.


மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க...

வெறும் 160 ரூபாய் முதலீட்டில் 23 லட்சம் சம்பாதிக்கலாம்!

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் தற்போதைய பேலன்ஸை பார்ப்பது எப்படி?

LIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)