இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 July, 2021 8:06 AM IST

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் ஓராண்டுத் தொழில் பயிற்சி பெறும் வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்சி அறிவிப்பு (Training Notice)

இஸ்ரோவின் கீழ் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் திரவ இயக்க எரிபொருள் மையத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கான ஓர் ஆண்டு தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி (Training)

தொழில்பழகுநர் (Graduate Apprentice)

காலியிடங்கள்(Vacancy)

73

தகுதி (Qualification)

பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ, சிவில், சிஎஸ்இ, கெமிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் முதல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை (Scholarship)

பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.9000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை (Method of selection)

பட்டயம், பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 2019, 2020 மற்றும் 2021 இல் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? (How to apply?)

www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தங்களது தகுதி விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளவும். , பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் இருந்து இஸ்ரோவின் திரவ இயக்க எரிபொருள் மையத்தை தேர்வு செய்து மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்களை ஜூலை 20ம் தேதிக்குள் முன்பதிவு செய்துவிட்டு, இஸ்ரோவின் திரவ இயக்க எரிபொருள் மையத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்கு : www.mhrdnats.gov.in
அல்லது
http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/LPSC_Revised_Notification.pdf
என்ற லிங்கில் சென்றுப் பார்த்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி (Last Date):

26/07/21

தகுதிவாய்ந்தவர்கள் முன்பதிவு செய்துகொண்டு, இஸ்ரோவில் பயிற்சி பெற்றுப் பயனடையலாம்.

மேலும் படிக்க...

Diploma முடித்தவர்களுக்கு NBCCL நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலை : உடனே விண்ணப்பிக்கவும்!

காட்டுத் தீயில் இருந்து, வனவிலங்குகள், இயற்கை வளங்களைப் பாதுகாக்க செயல் விளக்கப் பயிற்சி!

English Summary: Apprenticeship training for engineering graduates!
Published on: 12 July 2021, 10:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now