புதிய தொழில் முனைய முற்படுவோருக்கு உதவும் வகையில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒரு நாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெருகி வரும் சந்தை வாய்ப்பிற்கேற்ப முருங்கை இலை உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்த விளக்கங்கள் அளிக்கப் பட உள்ளது. விருப்புள்ள அனைவரும் கலந்துக்க கொண்டு பயன் பெறலாம்.
நமது ஊரில் பெரும்பாலான இல்லங்களில் வளர்க கூடிய ஒரே மரம் முருங்கை மரம். இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கையிலும் பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள். எல்லா தடப்வெப்ப நிலையிலும், எவ்வித பிரதேக்கிய கவனிப்பும் இல்லாமல் தானாக வளர கூடியது. இதன், இலை, காய், பூ என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டு இருப்பதால் இன்று இதற்கான சந்தையும், நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
முருங்கை இலை உற்பத்தியில் இந்தியா மற்றும் இலங்கை முன்னணியில் உள்ளது. தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடம் போன்ற மாநிலங்களில் முருங்கை அதிக அளவில் பயிரிட படுகிறது. இதற்கான சந்தை உலக அளவில் அதிகரித்திருப்பதால் இன்று முருங்கை இலை மற்றும் அதிலிருந்து பெறப் படும் மதிப்பு கூட்டப்ப பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெருகி வரும் சந்தை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒரு நாள் கருத்தரங்கை நடத்த உள்ளது. முருங்கை இலை சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு இந்த கருத்தரங்கு பயனுள்ளதாக இருக்கும் என தோட்டக்கலை கல்லூரி முதல்வர் முனைவர் தா.ஆறுமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்தரங்கு விவரம்
வரும் ஜனவரி 13 (திங்கள் கிழமை), 2020 அன்று மதியம் 2 மணி முதல் 6 மணி வரை, நடைபெற இருக்கிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 93619 21828, 94876 31465 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.