Blogs

Wednesday, 27 October 2021 10:32 AM , by: Elavarse Sivakumar

Credit : Samayam Tamil

வியாபாரம் என்று வரும்போது கட்டாயம் நாணயமாக இருப்பதே நல்லது. அதைப்போல சில குறிப்பிட்ட பழைய நாணயங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் இருக்கும்.

நாணயம் சேகரிப்பு (Coin collection)

அப்படிப்பட்டவரா நீங்கள்? இந்த நாணயங்கள் இருந்தால் நீங்கள் லட்சாதிபதி ஆகப்போகிறீர்கள். எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

பழைய நாணயங்களுக்கு பல்வேறு வலைதளங்களில் இப்போது அதிக டிமாண்ட் இருக்கிறது. பழைய நாணயத்தின் அசல் மதிப்பு மிக மிகக் குறைவு என்றாலும் அதற்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும்.

 

வலைதளங்களின் விற்பனை (Sales in this websites)

ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாகவும், அதிக டிமாண்ட் (Demand) உள்ளதாகவும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். குயிக்கர், காயின் பஜார்(Coin bazaar), ஈபே(e-pay), இந்தியா மார்ட்(IndiaMART), ஓ.எல்.எக்ஸ். (OLX)உள்ளிட்ட பல்வேறு வலைத்தளங்களில் இந்த நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உங்களிடமும் இந்த அரிய வகை நாணயங்கள் இருந்தால் அதை அதிக விலைக்கு விற்கு நீங்களும் லட்சாதிபதியாகலாம்.

ரூ.10 லட்சம் வரை (Up to Rs 10 lakh)

உங்களிடம் மாதா வைஷ்ணவி தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதைக் கொடுத்து 10 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம். இந்த நாணயங்கள் 2002ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும்.

மாதா வைஷ்ணவி தேவி இருக்கும் இந்த நாணயங்கள் இந்துக்கள் சிலரிடம் அதிர்ஷ்டம் தரும் பொருளாகப் பார்க்கப்படுகிறது. இதை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்று நம்புகின்றனர். எனவே இதற்கு நிறைய விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

பணம் பெறுவது எப்படி?

  • உங்களிடம் இந்த நாணயம் இருந்தால் அதை Quikr வெப்சைட்டில் நீங்கள் விற்பனை செய்யலாம்.

  • ஒரு விற்பனையாளராக நீங்கள் அந்த வெப்சைட்டில் பதிவுசெய்ய வேண்டும்.

    அதன் பிறகு இந்த நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • அந்த நாணயத்தை வாங்க விரும்புபவர் உங்களைத் தொடர்பு கொண்டு அதற்கான விலை கொடுத்து வாங்குவார்.

  • அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கு 10 லட்சம் வரையில் கிடைக்கும்.

மேலும் படிக்க...

இலவச ரயில் டிக்கெட் வேண்டுமா?உடனே இதைச் செய்யுங்க!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)