பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 February, 2021 8:48 PM IST
Credit : Zee Business

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் (SakthiKandha dass), இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு போதுமான வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது, ஆனாலும் அதற்கான முழுமையான வளர்ச்சி வெளிப்படவில்லை எனச் சில மாதங்களுக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் நாட்டின் பொருளாதாரத்தை (Economy) ஊக்குவிக்க அறிவித்த மினி பட்ஜெட் (Mini Budjet) மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்த 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் (Budjet) ஆகியவற்றில் பல்வேறு ஊக்க திட்டங்கள், நிதியுதவி ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்த 2 காலாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியில் இருந்து நிலையான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெப்போ விகிதம்

இன்று ரிசர்வ் வங்கி (RBI) தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை (Repco Ratio) எவ்விதமான மாற்றமும் செய்யாமல் 4 சதவீத வட்டி விகிதம் தொடரும் என அறிவித்துள்ளார். இதேபோல் ரிசர்வ் வங்கியின் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவே அடுத்த இரண்டு மாதங்களுக்கும் தொடரும் என இன்று தெரிவித்துள்ளார்.

கடன்கள்

இதனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வீட்டுக்கடன் (House loan), வாகன கடன், தனிநபர் கடன் (Personal loan) வாங்கியவர்களுக்கு எவ்விதமான வட்டி விகிதமும் மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி தனது அடிப்படை கடன் விகிதத்தை அறிவித்துள்ள நிலையில் வர்த்தக வங்கிகள் தற்போதைய வர்த்தகச் சூழ்நிலையில் கடனுக்கான வட்டியை (Interest) உயர்த்த வாய்ப்பு இல்லை, ஆனால் வங்கி நிர்வாகத்தின் முடிவுகள் படி வங்கிகள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வட்டியை உயர்த்தலாம்.

CRR விகிதம்

அடுத்த இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, CRR விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. CRR விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் வங்கிகளில் பணப் புழக்கத்திற்கான நிதி அளவீடு குறையும், இதனால் வங்கிகள் இந்தச் சரிவைக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் சரி செய்யும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 4 மாதத்தில் அதாவது அடுத்த 2 நாணயை கொள்கை கூட்டத்தில் Cash Reserve Ratio எனப்படும் சிஆர்ஆர் விகிதத்தை 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் அடுத்த நாணய கொள்கை கூட்டங்கள் இரண்டு மாத இடைவேளையில் மார்ச் 27 தேதியும், மே 22 தேதியும் நடக்க உள்ளது.

வட்டி விகிதம் உயர வாய்ப்பு

CRR விகிதம் உயர்த்தப்படும் போது வங்கியிடம் வர்த்தகத்திற்கான நிதி அளவீடுகள் குறையும், இதனால் கூடுதல் வருமானத்தை பெற வேண்டும் என திட்டத்துடன் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை (Interest Rate) உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகள், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு!

60 ரூபாயில் மாதம் 5,000 பென்சன் திட்டம்!

English Summary: Are you a bank borrower? This is for you!
Published on: 05 February 2021, 08:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now