Blogs

Monday, 13 September 2021 08:11 PM , by: Elavarse Sivakumar

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளது. எனவே பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

3 பிரிவுகளில் வேலை (Works in 3 sections)

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனி உதவியாளர், உதவியாளர் மற்றும் சட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தனி உதவியாளர் (Personal Assistant to Director)

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி (Educational Qualification)

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

  • பொறியியல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

  • மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்  (Experience)

மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்.

சம்பளம்  (Salary)

ரூ.47,000

உதவியாளர் – சட்டம் (Assistant Legal)

காலியிடங்களின் எண்ணிக்கை

 01

கல்வித் தகுதி (Educational Qualification)

இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் ஆங்கிலத்தில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்  (Experience)

நீதிமன்ற பணிகளில் மூன்று வருட அனுபவம் அவசியம். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ.26,000

உதவியாளர் (Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி (Educational Qualification)

முதுகலை வணிகவியல் அல்லது ICWA / CA வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் ஆங்கிலத்தில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் கட்டாயம்.

அனுபவம் (Experience)

அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் 3 வருடம் பணி புரிந்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்  (Salary)

ரூ.26,000

வயது (Age)

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.01.2021 அன்று 25 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை (Selection Method)

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை  (How to apply)

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேவையான ஆவணங்களுடன் சுய விவர படிவத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி
The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4 th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai 600 032.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி (Lastdate)

30.09.2021

மேலும் படிக்க...

வீட்டில் இருந்தே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்- SBI யின் அரிய வாய்ப்பு!

குளு குளு ஊட்டி மலைரயில் சேவை 6ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்- பயணிக்க ரெடியாகுங்கோ!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)