Blogs

Wednesday, 19 February 2020 10:58 AM , by: Anitha Jegadeesan

தமிழகத்தில் இருக்கும் அனைத்து கால்நடை மருத்துவப் பல்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் அவ்வப்போது விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் கால்நடை வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு,  பராமரிப்பு,  தீவன மேலாண்மை குறித்த பயிற்சிகள், தகவல்கள், ஆலோசனைகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இலவசப் பயிற்சி/ மருத்துவ முகாம்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது. அந்த வகையில் 24, 25ல் இலவச நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 

ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில் இரண்டு நாள் இலவச வகுப்பு நடக்க உள்ளது. இதில் லாபகரமான நாட்டுக் கோழி வளர்ப்பு, கோழி குஞ்சுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, நோய் தடுப்பு, சந்தை படுத்துதல் போன்ற தகவல்களை வீடியோ படக்காட்சி, கலந்துரையாடல் மற்றும் கோழிப்பண்ணையில் நேரடி களப்பயிற்சியுடன் விவரிக்க பட உள்ளது.

மாறி வரும் வாழக்கை முறையில் மக்களின் நுகர்வு எண்பது இயற்கையை முறையில் வளர்க்கப் படும் உணவு முறைகளை நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும்  நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள். குறைந்த பராமரிப்பில், குறைவான இடத்தில எளிதில் வருமானம் கிடைக்கும் தொழிலாக நாட்டு கோழி வளர்ப்பு இருப்பதால் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விரும்புவோர்கள் 0424 – 2291482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கால்நடை மருத்துவப்பல்கலைக் கழகம்  தெரிவித்துள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)