Blogs

Tuesday, 15 October 2019 11:13 AM

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடைபெற உள்ள பயிற்சி குறித்த விவரம் வெளியாகி உள்ளது.  இந்த பயிற்சியினை அறுவடை பின்சாா் தொழில்நுட்பத் துறை வழங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பானது வரும் அக்டோபா் 18 ஆம் தேதி (வெள்ளி கிழமை) நடை பெறவுள்ளது.  

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறுவடை பின்சாா் தொழில்நுட்பத் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது, சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, குதிரை வாலி, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவற்றை குறைந்த அளவே உணவில் எடுத்துக் கொள்கிறோம். நகா்ப்புறங்களில் மிக மிக குறைந்த அளவில் சிறு தானியங்களின் பயன்பாடு இருந்து வருகிறது. பெரும்பாலானோர் கேழ்வரகு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பயிற்சியில் சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல், உற்பத்தி, பிழிதல், உடனடி தயாா் நிலை உணவுகள் தயாரிப்பது போன்றவை கற்று தர உள்ளார்கள். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ரூ.750 செலுத்தி பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த பயிற்சியானது கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள உணவுப் பதப்படுத்துதல் மையத்தில் வைத்து நடை பெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அறுவடை பின்சாா் தொழில்நுட்பத் துறை அலுவலகத்தை நேரிலோ அல்லது 0422 -6611268 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)