கடும் உறைபனிப் பொழிவிலும் தேச எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு (Indian Army soldiers) சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.
எல்லைப் பாதுகாப்பு (Protect The Border)
கிழக்கு லடாக் எல்லையில் கடந்தாண்டு சீன ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். இதைத் தொடர்ந்து லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பூஜ்யத்திற்கு குறைவான தட்ப வெப்பத்தில் மிகக் கடுமையான பனிப் பொழிவில் எல்லையை பாதுகாக்கும் 'வீடியோ' மற்றும் புகைப்படங்களை, ராணுவ செய்தி தொடர்பு அதிகாரி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஒரு படத்தில், கடுமையான பனிப் புயல் வீச்சை பொருட்படுத்தாமல் ஒரு வீரர் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:பொய் அல்லது வெற்று நம்பிக்கையால் நாம் இலக்கை அடைய முடியாது. இரும்பு உடல், தியாக மனப்பான்மை, உள்ளத்தில் உறுதி தேவை. அனைவருக்கும் தேசப் பாதுகாப்பு தான் ஒரே இலக்கு.
வீரர்களின் தியாகம்
மற்றொரு வீடியோவில் கடும் பனிப் பொழிவுக்கு நடுவே வீரர்கள் அணிவகுப்பு நடக்கிறது. இதை குறிப்பிட்டு, 'காலையில் நீங்கள் பூங்காவில் மேற்கொள்ளும் நடை பயிற்சியுடன் இதை ஒப்பிட்டால் வீரர்களின் தியாகம் விளங்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
மேலும் படிக்க
அரசு ஊழியர் காப்பீடு திட்டத்தில் மகன், மகளை சேர்க்க அனுமதி!
அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்நீதிமன்றம்!