ரேஷன் பொருட்கள் விநியோகத்தில், புதிய வசதியை அரசு அமல்படுத்த உள்ளது. இதன்மூலம், ரேஷன் கடையில் நீங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.
ரேஷன் அட்டை
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் உணவுத் திட்டம் அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வரிசைத் தொல்லை
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் பலர், ரேஷன் கடைக்கே போவதில்லை. அதற்குக் காரணம் அங்கு மணிக் கணக்கில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. எடை மெஷின் போன்றவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் ரேஷன் கடையில் வரிசையில் காத்திருப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
புதிய வசதி
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், புதிய வசதியை அறிமுகம் செய்கிறது அரசு. இதன்படி, இனி ரேஷன் கடையில் நீங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. உத்தரகாண்ட் அரசு விரைவில் ஒரு புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. ரேஷன் கடையில் கிடைக்கும் இலவச ரேஷனைப் பெற தகுதியானவர்கள் இனி கடைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை.
ஏடிஎம் மெஷின்
இந்தப் புதிய வசதி மூலம் ஏடிஎம் மெஷினிலேயே உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இத்திட்டம் அதிவிரைவில் முன்னோடித் திட்டமாக சில மாவட்டங்களில் தொடங்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. நமக்குத் தேவைப்படும்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பது போல், தகுதியானவர்கள் இனி உணவு தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.
மகிழ்ச்சி
ரேஷன் கடைக்குச் சென்றாலே மணிக் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய சிரமம் இனி இருக்காது. அதேபோல, ரேஷன் பொருட்களின் எடை மெஷின்களில் மோசடி நடைபெறுவதாகவும், உணவு தானியங்களைக் குறைந்த அளவில் வழங்குவதாகவும் புகார்கள் உள்ளன. ஆனால் ரேஷன் மெஷின் விஷயத்தில் அந்தப் பிரச்சினை இருக்காது. விரைவில் இத்திட்டம் தமிழகத்துக்கு வர வாய்ப்பு உள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அதிலிருந்து கோதுமை, அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏடிஎம் இயந்திரம் போலவே எடுக்க முடியும். இந்த வசதி வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏற்கெனவே அமல்
ஏற்கெனவே இந்த உணவு தானிய ஏடிஎம் திட்டம் ஒரிசா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...