Blogs

Wednesday, 21 September 2022 08:48 AM , by: Elavarse Sivakumar

இந்த உலகில் ஒருவர் கூட உணவின்றி வாடக்கூடாது என்பதைத்தான் தனி ஒருவனுக்கு உணவில்லையேல், இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினார் பாரதி. அந்தக் கொள்கையின் அடிப்படையில், பசியைப் போக்கும் வகையில், நாடு முழுவதும், இலவச ரொட்டி வழங்கும் தானியங்கி இயந்திரத்தைப் பொருத்தியுள்ளது இந்த நாடு. இதில் எப்போது பட்டனைத்தட்டினாலும், சுடச்சுட ரொட்டி கிடைக்கும்.

பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், 'வெண்டிங்' இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

பட்டினி

இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், டெலிவரி ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்றுவேளை சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களை கழிக்கின்றனர்.
இந்நிலையை மாற்ற வேண்டும் என, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

வெண்டிங் மிஷின்

இதன் ஒருபகுதியாக, துபாயில் இலவச உணவு அளிக்கும், 'வெண்டிங் மிஷின்' எனப்படும், தானியங்கி இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அவர் நிறுவியுள்ளார். இந்த உணவு இயந்திரங்கள் கடந்த 17ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.துபாயின், 'அஸ்வாக்' மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், அரபி ரொட்டி, 'பிங்கர் ரோல்' ஆகிய இரண்ட வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன.

நன்கொடை

மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?

ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)