தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. இதில் நவீன யுக்திகளை பயன்படுத்தி திசு வாழை, கிழங்கு வாழை வளர்ப்பு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்தியை பெருக்குவதற்கும், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், வேளாண்மைத்துறை தற்போது கிழங்கு வாழை மற்றும் திசு வாழைக்கு மானியங்கள் வழங்கி வருகிறது.
கிழங்கு வாழைக்கு மானியமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.26250ம், திசு வாழைக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.37,500ம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக விவசாயிகள் கிழங்கு வாழைக்கு உர பில் ரூ15000+ஜிஎஸ்டி மற்றும் மருந்து பில் ரூ.25000+ ஜிஎஸ்டியுடன் கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதே போன்று திசு வாழைக் கன்றுகளை மானியத்தில் பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் அதற்கான தொகையை செலுத்தி கன்றுகளை பெற்றுக் கொண்டு பின்பு அத்தொகை அவர்களது வங்கி கணக்கில் மானியமாக வரவு வைக்கப் படும்.
அவிநாசி வேளாண்மைத்துறை சார்பாக வழங்கப்படும் மானியங்களை பெற திருப்பூர் மாவட்டம் விவசாயிகள் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் ஆவணங்களை வேளாண்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப் பட்ட வாழை பயிர் சாகுபடி சான்றிதழ்.
- விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் சிட்டா, அடங்கல் (கீழ் பகுதியில் தற்போது நடவு செய்யப்பட்டு இருக்கும் வாழையின் விபரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்), ஆதார் கார்டு ஜெராக்ஸ், ஸ்மார்ட் கார்டு ஜெராக்ஸ், பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ், போட்டோ- 2 ஆகியனவாகும். மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ர.வினோத்குமார்,
உதவி வேளாண்மை அலுவலர்,
அவிநாசி,
அலைபேசி எண்: 98422 08001
நன்றி: அக்ரி டாக்டர்