தேனி அருகே, வளர்த்த செல்ல நாய்க்கு அதன் உரிமையாளர் வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளார்.
நாய் பிரியர் (Dog lover)
தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சவேணி . இவர்களுக்கு தமிழ்செல்வன் என்ற மகனும், கல்பனா தேவி என்ற மகளும் உள்ளனர்.
குமரேசனுக்கு சிறு வயதில் இருந்தே செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். இவரது வீட்டில் நாட்டு நாய், பொமேரியன், கோம்பை, லேபர் டாக், சித்திபாறை என 10-க்கும் மேற்பட்ட பல்வேறு நாய்கள் உள்ளன.
அதிக பாசம் (More affection)
தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு தமிழ்செல்வன் என்ற மகனும், கல்பனா தேவி என்ற மகளும் உள்ளனர்.
குமரேசனுக்கு சிறு வயதில் இருந்தே செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். இவரது வீட்டில் நாட்டு நாய், பொமேரியன், கோம்பை, லேபர் டாக், சித்திபாறை என 10-க்கும் மேற்பட்ட பல்வேறு நாய்கள் உள்ளன.
வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் சுற்றிய பெண் நாயை அரவணைத்து அதற்கு சில்க் சுமிதா என பெயரிட்டு வளர்த்து வந்தனர். சமீபத்தில் இந்த நாய் கருவுற்றதையடுத்து தனது வீட்டில் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி உறவினர்கள் அனைவரையும் வரவழைத்து சில்க் சுமிதாவுக்கு பிடித்த எலுமிச்சை, புளி, தயிர், பொங்கல், கேசரி சாதம் என 5 வகை உணவுகளை வழங்கினர்.
மேலும் புதிய ஆடை, மாலை அணிவித்து வளையல்கள் மாட்டி முகத்தில் சந்தனம், குங்குமம் வைத்து வளைகாப்பு நடத்தினர்.
குடும்ப உறுப்பினர் (Family member)
இது குறித்து குமரேசன் தெரிவிக்கையில், நான் சிறு வயது முதலே நாய்களை வளர்த்து வருகிறேன்.
இதனை செல்லப் பிராணிகள் என்று சொல்வதை விட என் வீட்டில் உள்ள உறவு போலவே பாவித்து வருகிறேன். நாங்கள் என்ன உணவு சாப்பிடுவோமோ அதனையே அவைகளுக்குப் பகிர்ந்து வழங்குவோம். நன்றி மறவாத இனம் என்றால் அது நாய்கள்தான். எனவே கருவுற்ற சில்க் சுமிதாவுக்கு வளைகாப்பு நடத்தினோம் என்றார்.
மேலும் படிக்க...
ஏமாற்றும் கணவனை மனைவி கொலை செய்யலாம்! அதிரடி சட்டம்!
டிரெண்டிங் மோகம் - ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து கொண்ட நபர்!