மாத சம்பளம் வாங்குபவர்கள், நல்ல லாபம் பார்க்க SBI-யின் சேவிங்ஸ் அக்கவுண்ட் (Savings Account) கைக்கொடுக்கிறது. இதில் சிறப்பு சலுகை என்னவென்றால் வெறும் ரூ.100 இருந்தாலே வங்கியில் கணக்கை தொடர முடியும்.
பலவிதமான சேவிங்கஸ்:
இன்றைய உலகில் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழலில் சேமிப்பு (Savings) இல்லையெனில் கஷ்டம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்திற்கும் தான். சாதாரண சேமிப்பு கணக்குகள் தொடங்கி, பிக்சட் டெபாசிட் (Fixed Deposit), 5 ஆண்டு சேமிப்பு, சேலரி அக்கவுண்ட் என பெரும்பாலும் வங்கிகளிலே கணக்குகள் தொடங்கப்படுகின்றன. இப்படி வங்கிகளில் நாம் தொடரும் கணக்குகளில் எத்தனை விதமான சேமிப்புகள் உள்ளன என்பதை நாம் தெரிந்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி வைத்திருக்கும் தொடர் வைப்பு நிதி பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தொடர் வைப்பு நிதி பற்றி முக்கிய தகவல்கள்:
எஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு கணக்கு தொடர் வைப்பு நிதி (Continuous Deposit Fund). வங்கிகளில் மாதந்தோறும் முதலீடு (Investment) செய்து லாபம் பெறக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட் (Recurring Deposit).
- இந்தத் திட்டத்தில் மாத சம்பளம் (Monthly salary) வாங்குவோர் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம். இது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்ற ஒரு சேமிப்பு திட்டமாகும்.
- இந்த திட்டத்தில் இருக்கும் ஒரு மாபெரும் சிறப்பு சலுகை என்னவென்றால் வெறும் ரூ.100 இருந்தாலே வங்கியில் கணக்கை (Bank Account) தொடர முடியும்.
- மாதம் ரூ. 10 முதல் இந்த கணக்கில் சேமிக்கலாம்.
- குறிப்பாக இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிகப்படியான சலுகை வழங்கப்படுகிறது.
- அவர்களுக்கு சேமிக்கும் பணத்திற்கு. 7 சதவீதம் முதல் வட்டி விகிதம் (Interest Rate) அளிக்கப்படுகிறது.
1 வருடம் 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என திட்டத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுப்படும். ஆனால் வழக்கமான சேமிப்பு கண்க்கில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்குமோ அதை விட 1 சதவீதம் இதில் அதிகம். இந்தத் திட்டத்தில் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் இணைந்து பயனடையலாம். SBI வங்கியின் மிகச்சிறந்த திட்டமாகும் இது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
2020 ஆம் ஆண்டில் பண மழை பொழிந்த சிறப்பானத் திட்டங்கள்!
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு! ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி உள்ளே!