கொரோனா பரவல் எதிரொலியின் காரணமாக இனி 4 மணி நேரம் மட்டுமே வங்கிகள் செயல்பட உள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
நிலைமை மோசம் (The situation is dire)
இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.60கோடியாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவின் (Coronavirus) தாக்கம் கடும் மோசமாக உள்ளது.
இந்த சூழலில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பல்வேறு வணிக வளாகங்கள், திரையரங்குகள் எல்லாம் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் நேரம் குறைப்பு (Banks time reduction)
இந்நிலையில் கொரோனா தொற்றுநோயால் எழும் நிலைமையைக் கருத்தில் கொண்டு வங்கிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் (எஸ்.எல்.பி.சி)ஆலோசனைக்கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் வங்கிகளின் (Banks) நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இருக்கும். பணம் எடுத்தல், காசோலை, அரசு தொடர்பான வேலைகள் போன்ற முக்கிய வேலைகள் மட்டுமே வங்கி ஊழியர்கள் செய்வார்கள்.
மே 15 வரை (Until May 15th)
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மே 15 ஆம் தேதி வரை வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்பட உள்ளன. தேவை ஏற்பட்டால், இந்த உத்தரவு மேலும் நீடிக்கப்படுலாம்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது.
ஏடிஎம் சேவை (ATM service)
அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
மினிமம் பேலன்ஸ் உயர்வு (Minimum balance increase)
இதனிடையே ஆக்சிஸ் வங்கி மே 1ம் தேதி முதல் மினிமம் பேலன்ஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி மினிமம் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைம், லிபர்டி சேவிங்க்ஸ் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் 25 ஆயிரமாக உயர்வு.
மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் ஒவ்வொரு 100 க்கும் ரூ.10 அபராதம் விதிக்கப்படும். மாத சராசரி ரூ.7,500 க்கு கீழ் இருந்தால் ரூ.800 வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். இந்த திடீர் அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
SBI-யின் அதிரடி ஆஃபர்! பிரிமியமே இல்லாமல் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ்!
மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம்: 6 ஆண்டுகளில் 15 இலட்சம் கோடி கடன்!
உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க, பெஸ்ட் முதலீடு எதுன்னு பாருங்க!